முடி கொட்டாமல் இருக்கவீட்டிலேயே இருக்கு அட்டகாசமான மருந்து

 கசகசா:

முடி  கொட்டாமல் இருக்க கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி கொட்டுவது நின்று விடும்.
 
 
 
முடி கொட்டாமல் இருக்கவீட்டிலேயே இருக்கு அட்டகாசமான மருந்து 

கற்றாலை சாறு:

முடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி கொட்டாது அடர்த்தியாக, நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

சின்ன வெங்காயம்:

சின்னவெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி கொட்டாது.

செம்பருத்தி:

செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டாது, அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

முட்டை:

முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கொட்டுவது முழுமையாக நின்று விடும்.

முடக்கத்தான்:

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும். 
 

முடி கொட்டாமல் இருக்க பாதுகாப்பு:

இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் பயன்படுத்தி பார்க்கவும். முடி கொட்டுவது கண்டிப்பாக நின்று விடும் அதுமட்டுமல்லாமல் இந்த கீரை நரை விழுவதையும் தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *