எப்போ பாத்தாலும் என்னடா இது வாழ்க்கைனு தோனுதா…! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

 
 
 
 
 
 
 
 
 
எப்போ பாத்தாலும் என்னடா இது வாழ்க்கைனு தோனுதா...! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

   நாம் அன்றாடம் வாழ்க்கையில் பல சந்தோசங்களை சந்திச்சிருப்போம்.. துக்கங்களையும் சந்திச்சிருப்போம். 

சந்தோசத்துல நடந்ததை கொஞ்ச நாளைக்கு அந்த அலாதி இன்பம் நமக்குள்ள இருக்கும்,   ஆனா கஸ்டமான அந்த தருணத்த  அவ்வளவு சீக்கரமா மறக்கவே மாட்டோம் அது கூடவே தான வாழ்க்கைய ஓட்டிட்டு இருப்போம்.  

அதுக்கு காரணம் …   நாம கஷ்டத்த எதிர்கொள்ள தாயாராக இல்லாம இருக்குறது தான் அதுக்கு முக்கியமா ஒரு வில்லனா இருக்குறது,,  

  அது எப்படி கஷ்டத்த எதிர்கொள்றதுனு கேக்குறீங்களா?   உங்களுக்குனே கடவுள் எழுதிவெச்ச மாதிரி ஒரு சின்ன கஷ்டம் வரும்போதெல்லாம் அப்போ ஒன்னு மட்டும் நினைச்சிக்கோங்க

இந்த கஷ்டத்தோடலாம் வாழ்க்கை முடியப்போறது இல்ல இன்னும் நெறைய இருக்கு அதலாம் அசால்ட்டா அடிச்சி தூக்க தைரியம் கொடு ஆண்டவானு  ஒரு கும்மிட போட்டு நீங்க பன்ன வேண்டியது ஒரு 6 வழிமுறைகள் தான்,  அதில் 

சாப்பாடு

  நீங்க ஒரு சாப்பாடு பிரியரா இருந்தா பிடிச்ச சாப்பாட சாப்பிடுங்க.. சாப்பிடாம மட்டும் இருக்காதீங்க..    எள்ளுதான் எண்ணெக்கு காயுது, எலி புளுக்கையும் ஏன் சேந்து காயுது என்கிற மாதிரி மனசு படுற பாட்டுக்கு எதுக்கு வயிரும் பாடு படனும். மனசாற பிடித்த உணவுகளை ரசிச்சு சாபிடுங்க..  

ஆறுதல்

யாராவது  வந்து ஆறுதல் கூறுவாங்களானு எதிர்ப்பாக்காதீங்க.. பொறக்குறப்போ தனியா தானே பொறந்தோம்  எதுக்கு எடைல மட்டும் எல்லாத்துக்கும்  ஒரு ஆள் உதவிய தேடனும்னு நெனச்சிக்கோங்க..

அதுவும் முடியலையா?  நீங்களே ஒரு ஆறுதலை உங்களுக்கே சொல்லிக்கோங்க.. நாம விட நம்மல அதிகம் யாராலையும் அவ்வளவு நல்லா புரிஞ்சி வெச்சிருக்க முடியாது..  

பரிட்சையமானவர்களுடன் பேசுவது

எப்போ பாத்தாலும் என்னடா இது வாழ்க்கைனு தோனுதா...! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

   நமக்கு பிடித்தவர்களுடன் கஷ்டங்களை பற்றி பேசாமல் சந்தோசமான தருணங்களை அல்லது ஏற்கனவே வாழ்வில நடந்த ஸ்வாரஸ்யங்களை பற்றி மட்டுமே பேசலாம்.. அவர்களிடம் கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

பாவம் உங்க சோகத்த அவங்ககிட்ட கொண்டு போய் திணிக்கிற மாதிரி நிலமை ஆகிவிடும்.. அவங்களும் நாமல மாதிரி சோகமா ஆய்டுவாங்க.. அடுத்து உங்கள பாத்தாலே ஆஹா சோகக்கதைய ஒரு வண்டில ஏத்திட்டு வந்துட்டான்டானு தெறிச்சி ஓடிருவாங்க..  

சுற்றுலா அல்லது வெளியில் செல்வது

எப்போ பாத்தாலும் என்னடா இது வாழ்க்கைனு தோனுதா...! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

   மனசு சோகமா இருந்தால் சும்மா அப்படியே ஒரு லாங் ட்ரைவ் போனா நல்லா இருக்குமேனு நெரைய பேர் சொல்லுவாங்க.

ஆமாம் உண்மைதான் தனியாகவோ, நண்பர்களுடனோ, அல்லது வாழ்க்கை துணையுடனோ அப்டியே  பார்க், பீச். சினிமானு அன்னிக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க.. அன்னிக்கி நைட் துக்கத்த மறந்து கண்டிப்பா நல்லா தூக்கம் வரும்,,  

யோகா மற்றும் உடற்பயிற்ச்சி

எப்போ பாத்தாலும் என்னடா இது வாழ்க்கைனு தோனுதா...! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

  என்னடா இது வாழ்க்கைனு எப்போதும் சகிச்சிகாம மனச கன்ரோல் பன்னுங்க,   அதுக்கு யோகா ஜிம்னு கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பன்னுங்க.. 

  உடம்ப பிட் ஆஹ் வெச்சிக்கனுங்கிற நெனப்புன மனசு கஷ்டமெல்லாம்  மூனாவது தெருவுல கெடக்குற குப்பை தொட்டிக்கு போய்டும்..


தோட்டம் அல்லது மரம் வளருங்கள்

எப்போ பாத்தாலும் என்னடா இது வாழ்க்கைனு தோனுதா...! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

  வீட்டில் இடமிருந்தால் காய்கறி செடி வளருங்கள்  அல்லது மரம் வையுங்கள்,

அதை கண்ணும் கருத்துமாக பராமரிப்பது அது வளர்ந்த பிறகு அதில் வரும் காய் கனிகள் மூலம் கிடைக்கும் பயன் அதிகம்.

கஷ்டத்துலயும் ஒரு கொய்யாபழம் கிடைச்சா சந்தோசம் தானே..   எல்லாம் நாம் எண்ணம் வைத்தால் தான் முடியும்.

எப்பொதுமே எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் பாசிட்டிவா பேசுங்க நல்ல விசயங்களையே நினைங்க,

எல்லாருக்கும் நல்லதையே சொல்லிகொடுங்க.. வாழ்க்கை நல்லா இருக்கும்.. வாழ்க வளமுடன்.

Share


copy the below code

2 thoughts on “எப்போ பாத்தாலும் என்னடா இது வாழ்க்கைனு தோனுதா…! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

Leave a Reply

Your email address will not be published.