சாப்பிட்ட ருசியை என்றென்றும் மறக்க முடியாத தயிர்சாதம் செய்வது எப்படி

 
 
 
 
 
 
 
 
 

இது தான்டா டேஸ்ட்..! என்று சப்புகொட்ட

 வைக்கும் தயிர் சாதம் செய்யனுமா..?

  தயிர் சாதம் என்றவுடனேயே அனைவருக்கும் நாக்கில் நீர் சொட்ட ஆரம்பித்துவிடும்..   அந்த கோவிலில் கொடுக்கும் தயிர் சாதம் போல பன்னு அம்மான்னு  நம்மில் பலபேர் கேட்டுருப்போம்.

  பல முறைகளில் தயிர் சாதம் செய்யலாம் அதில் பார்த்தவுடனே நாக்கில்  எச்சில் ஊர ஆரம்பிக்கும் தயிர்சாததை இப்பதிவில் பார்க்கலாம்

சாப்பிட்ட ருசியை என்றென்றும் மறக்க முடியாத தயிர்சாதம் செய்வது எப்படி

தயிர் சாதம் நன்மைகள்:

ஏனென்றால் அதில் அவ்வளது மகிமை இருக்கிறது. தயிரில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

  வேகாத வெயிலில் வேளை செய்தவர்  பசியாற மதியம் தயிர் சாதம் சாப்பிட்டால் அவர் உடம்பில் இழந்த சக்தியை மீண்டும் கிடைக்க பெறுவார்,

  தயிர்சாதம் உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்க்கு அமைதியையும் கொடுக்கிறது,,  

தயிர்சாதம் சாப்பிட்டால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்படும்.

  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஆனது அதிகரிக்கும்,  

முகம் பொலிவுபெறும்.  இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

  அப்படிபட்ட தயிர்சாததை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்  

தேவையான பொருட்கள்:

 1.   அரிசி          –      இரண்டுகப்
 2.    தயிர்          –         அரை லிட்டர்
 3.    மாதுளை – பழம் – 1
 4.    கேரட்         -1
 5.    திராட்சை – 30
 6.    எண்ணை  – இரண்டு மேஜைக்கரண்டி
 7.     கடுகு          – ஒரு டீ ஸ்பூன்
 8.    கொத்தமல்லி தழை – சிறிதளவு
 9.    இஞ்சி         –  சிறிதளவு
 10. உளுந்து      – ஒரு தேக்கரண்டி
 11.  கருவேப்பிலை – 10 இழைகள்

  முதலில் அரிசியை நன்றாக கழுவியபின் எப்பொழுதும் சாதம் செய்வது போல சிறிது உப்பினை போட்டு, குக்கரிலோ அல்லது பானையிலோ மிதமான குழைந்த நிலையில் வடித்து எடுத்துக்கொள்ளவும்,

 வாணலியில் இரண்டு மேஜைக்கரண்டி அளவு  எண்ணெய் விட்டு சூடானதும், அடுப்பை சிம் இல் வைத்துவிட்டுஅதில் கடுகு மற்றும் உளுந்தை போட்டு நன்றாக வதக்கவும்,  

கடுகு வெடித்தவுடன்  அதில் கருவேப்பிலையை போடவும். கருவெப்பிலை ஆனது சற்று வதங்கும் பதத்தில் நருக்கிய கேரட்டினை சேர்க்க வேண்டும், ( கேரட்டினை முன்னரே சிறு சிறு  துண்டாக நருக்கிக்கொள்ளவும்)  

கேரட் சற்று நிறம் மாறும் சமயத்தில் அடுப்பை ஆப் செய்துவிட்டு அரை லிட்டர் தயிரை வாணலியில் ஊற்றவும், தயிர் கொஞ்சம் புளித்து இருந்தால் புளிப்பு சுவை நன்றாக இருக்கும்,

  இப்போது ஏற்கனவே வடித்து வைத்திருந்த மிதமாக குழைந்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி  அதில் தயார் செய்த தயிர் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளரிவிடவும்.  

சாதத்தில் தயிர் கலவையானது சரியான பதத்திற்க்கு வரும் வரை தயிர்கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.. தேவையான அளவு தூள் உப்பினை சேர்த்து கிளரிவிடவும்..  

சரியான பதத்தில் சாதம் வந்தவுடன் அதில் திராட்சை மற்றும் மாதுளை பழத்தை சேர்த்து நன்றாக கிளரிவிடவும்..  

கிளரி முடித்த பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சிறு சிறு துண்டாக நருக்கி அதன் மேலே பரவலாக தூவிவிடவும்..  

  இப்போது அருமையான சுவைமிகுந்த தயிர்சாதம் ரெடி.  

தயிர்சாதத்துடன் உருளைகிழங்கு வருவல் சேர்த்து சாப்பிட்டால் சுவை பட்டையை கிளப்பும் வேற லெவல் சாப்பாடுதான்..!  

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.