ஓய்வு நேரத்தில் வீட்டிலேயே பெண்கள் வருமானம் ஈட்டக்கூடிய அருமையான வழிமுறைகள்…

 வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆசையா?
இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

ஓய்வு நேரத்தில் வீட்டிலேயே பெண்கள் வருமானம் ஈட்டக்கூடிய அருமையான வழிமுறைகள்...

 வீட்டில் இருக்கும் பெண்கள் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும்,

 அவர்கள் ஆனால் வெளியில் சென்று வேலை செய்வதற்கு சில பேருக்கு நேரம் இடம் கொடுக்காது,

அப்படிப்பட்டவர்கள் கூட வீட்டிலிருந்தே ஒரு சில வேலைகளை செய்வார்கள் சிறு தொகைகளை ஈட்டுவார்கள் அந்த மாதிரியான ஒரு தொழிலை தான் இன்னைக்கு நம்ம  இந்தப் பதிவில் பாக்க போறோம்

மாடி தோட்டத்தில் காய்கறி செடிகள் வளர்ப்பது

பொதுவாகவே நம் வீட்டில் மாடியில் துணி காய போடுவதற்கு மட்டுமே மொட்டை மாடியில் யூஸ் பண்ணுவோம்

அப்படி இல்லன்னா சும்மா தான் இருக்கும்
நம்ம மாடி தோட்டத்தில் இடம் இருந்துச்சுன்னா அதுல கிரீன் ஹவுஸ் அமைச்சு சிறு சிறு காய்கறிகள் பயிரிடலாம்,

இது ரொம்ப ஈசிதான் இது சம்பந்தமாக நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்,

அதில் முக்கியமான ஒன்று வீட்டில் அத்தியாவசியமாக தேவைப்படும் தக்காளி கத்தரிக்காய் மிளகாய் புடலங்காய் வெண்டைக்காய் பூசணிக்காய் சுரைக்காய் இதுபோன்ற பல வகையான காய்கறிகள் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

இதன் மூலம் ஒரு மாதத்திற்கு நமக்குத் தேவைப்படும் காய்கறிகள் பூர்த்தியடையும் வெளியில் இதற்காக நாம் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தலாம் ஆரோக்கியமான ரசாயனம் இல்லாத காய்கறிகளையும் பெறலாம்…

கைவினைப் பொருள்கள்

சிறு சிறு கைவினைப் பொருட்களை எப்படி செய்வது என்பதை கற்றுக்கொண்டு வீட்டிலிருந்து அதனை உருவாக்கி பணம் ஈட்டலாம் குறிப்பாக ஒயர் கூடை பின்னுவது, எம்ராய்டிங் செய்வது, தையல் கலை,  பிளவர் வாஸ், செய்வது இதுபோன்று பலவகையான வீட்டிலிருந்து செய்யக்கூடிய கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யலாம்

மொட்டைமாடி வத்தல்

பொதுவாக முன்பெல்லாம் நமது வீட்டில் பாட்டிகள் இருந்தால் அவர்கள் வத்தல், வடவம், மோர் மிளகாய், இதுபோன்று பலவற்றை வீட்டிலேயே தயாரிப்பார்கள்,

இன்றைய நவீன காலத்தில் நாம் அதை அனைத்தையும் கடைகளில் சென்று தான் வாங்குகிறோம்,

 அதனை வீட்டிலேயே தயாரித்து அருகிலுள்ள கடைகளில் ஹோல் சேல் ஆக விற்பனை செய்யலாம் உங்களுடைய தயாரிப்பு உறுதியாக இருக்கும் பட்சத்தில் விற்பனை கண்டிப்பாக அதிகமாகும் இதன் மூலம் மாதம் கண்டிப்பாக ஒரு பணம் ஈட்ட முடியும்,

பிளாகர்

நீங்கள் தனித்துவமான திறமை படைத்த இருந்தாலோ அல்லது சமையல் கலைகளை அடுத்தவர்களுக்கு எடுத்துரைக்க எழுத்து வடிவமாக ஆன்லைனில் பதிவிடுவது பிளாகர் ஆகும் இதன் மூலம் அதிகமான மக்கள் பார்க்கும் வண்ணத்தில் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல தொகையானது கிடைக்கும்.

யூடியூப்

யூடியூப் ஆனது மிகவும் பிரபலமான ஒரு வலைத்தளம் ஆகும் உங்களுக்கே கூட சில தகவல்களை நீங்கள் யூட்யூபில் தான் தெரிவீர்கள் அல்லது வலைத்தளங்களில் தேடுவீர்கள் நீங்கள் உங்களுக்கு தனித்துவமான திறமைகள் சமையல் கலைகள்,

 எம்ப்ராய்டரி கலைகள் பாடப்பிரிவுகள் இது மெஹந்தி போடுவது எப்படி வீட்டை பராமரிப்பது எப்படி இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து மக்களுக்கு பதிவிடுவது மூலம் அதிக மக்கள் பார்க்கும் பொழுது ஒரு தொகையானது மாதம் கிடைக்கப்பெறும்.

டியூசன் எடுப்பது

இன்றைய காலகட்டத்தில் அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நல்ல வகையில் படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்,

அதன் காரணமாக தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படித்து வருவது மட்டுமில்லாமல் தனியாக பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்களை மாலை அல்லது காலை நேரங்களில் டியூஷன் அனுப்புகிறார்கள் நீங்கள் பாடப்பிரிவுகளில் வல்லவராக இருந்தால் மாணவர்களுக்கு வீட்டில் டியூஷன் எடுக்கலாம்

ஆன்லைன் கட்டணம்

உங்கள் அருகில் இருக்கும் மக்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் அவர்களது மாதம்தோறும் இருக்கும் எலக்ட்ரிசிட்டி பில் லேண்ட்லைன் பில் இதுபோன்ற மாத பில்களை நீங்கள் ஆன்லைனில் கட்டிக்கொடுத்து சிறு வருமானம் ஈட்டலாம்,

பால் தயிர் விற்பனை

உங்கள் வீட்டில் சிறிது இடம் இருந்தால் ஹோல்சேல் ஆக பால் மற்றும் தயிர் டீலரிடம் குறைவான விலைக்கு வாங்கி அருகில் இருக்கும் வீடுகளுக்கு சப்ளை செய்யலாம் இதன் மூலம் மாதம்தோறும் நல்ல ஒரு வருமானம் கிடைக்கும்,,

மெழுகுவர்த்தி உற்பத்தி

மெழுகுவர்த்தி ஆனது தற்போது கரண்ட் கட்டாகி கொண்டிருக்கும் இந்த காலத்தில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கட்சிகளில் உபயோகப்படுத்துகிறார்கள் மெழுகுவர்த்தி மிஷின் ஆனது ஆயிரத்திற்கும் கிடைக்கும் அதனை வாங்கி வீட்டிலேயே மெழுகுவர்த்தி தயார் செய்து அருகில் உள்ள கடைகளில் ஹோல்சேல் ஆக விற்பனை செய்யலாம்,,

ஆன்லைன் வேலைகள்

தற்போது இருக்கும் கம்ப்யூட்டர்காலத்தில் அனைவருமே கம்ப்யூட்டர் மூலமாகவே பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அதன் வாயிலாக ஆன்லைனில் ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் குவியத் தொடங்கின

 அதன்படி பிரீலன்சர் போன்ற சைட்டுகளில் நமக்கு பலவிதமான வேலை வாய்ப்புகள் இருக்கிறது டேட்டா என்றி HDML டெவலப்மென்ட், வெப் டிசைனிங் போட்டோஷாப் இதுபோன்ற பலவகையான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்புகளை தேர்வு செய்யும் பட்சத்தில் ஏற்கனவே இந்த வேலை செய்யச் சொல்லி பதிவிட்ட கம்பெனிகள் சில தொகைகளை அதற்கு என்டர் ஆக FIX செய்து இருப்பார்கள்,

 அதனைவிட குறைவான தொகையில் நீங்கள் வேலை செய்து கொடுக்கும் வண்ணத்தில் உங்களுக்கு அவர்கள் அதற்கான பணத்தை அளிப்பார்கள் இப்படி நீங்கள் வருமானம் ஈட்ட முடியும்..

உங்களுக்கு இதுபோன்று வீட்டிலிருந்தே பெண்கள் ஓய்வு நேரங்களில் செய்யக்கூடிய வேலைகள் இருந்தால் கீழே கமெண்ட் செக்சனில் சொல்லவும், அனைவரும் பயனடைவார்கள்

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *