உங்களை சுற்றியுள்ள அனைவர் மனதையும் கவர வேண்டுமா?? attract everyone

 உங்களை சுற்றியுள்ள அனைவர் மனதையும் கவர வேண்டுமா??

உங்களை சுற்றியுள்ள அனைவர் மனதையும் கவர வேண்டுமா?? attract everyone

எல்லாருக்கும் எப்போதும் நம்மளை பிடிக்க வேண்டுமென்று ஆசை இருக்கும் ஆனால் அப்படியே அனைவரும் நம்மிடம் வந்து பேசி விடமாட்டார்கள்

 நமக்கு நண்பர்கள் கூட சில பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள் உறவினர்களும் கூட அப்படித்தான் ஆனால் உங்களுக்கு அனைவரிடத்திலும் நட்பாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்..

அப்படி அனைவர் மனதையும் கவர்வதற்கான சில வழிமுறைகள் இதோ…

பேச்சு

அடுத்தவர்களிடம் பேசும்பொழுது மிகவும் கான்பிடண்ட் ஆஹ பேசுங்கள் அவர்களிடத்தில் ஒரு நம்பிக்கையை உருவாக்குங்கள் உண்மையைக் கூறுங்கள்,
அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கும்படி இருங்கள்,
அனைவரிடத்திலும் பாகுபாடு இல்லாமல் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்யுங்கள், அவர்களுக்கு கஷ்ட நஷ்டம் காலங்களில்கூட உதவியாய் இருங்கள், உங்கள் வீட்டின் சுபகாரியங்களுக்கு அவர்களை அழையுங்கள்,

கோபம் காட்டாதீர்கள்

உங்களது கோபங்களை அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்,
உங்களுக்கு யாராவது மேல் கோவம் இருக்கும் போது அதை மற்றொருவர் மீது காட்டாதீர்கள்,

 இதனால் அவர்கள் உங்கள் மேல் ஒரு அபிப்ராயம் தோணும் அதன்மூலம் உங்களிடத்தில் சரியாக பேச்சுக் கொடுக்க மாட்டார்கள்,,

 அவர்கள் ஏதேனும் கோபமா இருந்தாலும் கூட சமாதானமாக பேசியவர்களை சமாதானப் படுத்துங்கள்,, கெட்ட பாதைகளுக்கு அவர்களை ஒரு போதும் வழி நடத்தாதீர்கள் நல்லவற்றையே கூறுங்கள்,,

உங்களை உயர்ந்தவராக காட்டிக் கொள்ளாதீர்கள்

எப்பொழுதும் உங்களை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள், அனைவரும் தனித் திறமைகளைக் கொண்டு உள்ளவர்கள்தான் என கூறுங்கள்,

உங்களை இந்த ஒரு விசயத்திற்கும் எடுத்துக்காட்டாய் கூறாதீர்கள் அதேபோல் யாரையும் கூறாதீர்கள்,

அனுதாபம் காட்டாதீர்கள்

யாரிடமும் அனுதாபம் காரணமாக உதவி செய்யாதீர்கள் அனுதாபம் காட்டாதீர்கள், நேர்பட பேசுங்கள், இல்லாதவர்களுக்கு உதவுங்கள் ஆனால் வலதுகை கொடுப்பதை இடது கைக்கு தெரியாத வண்ணம் செய்யுங்கள்,, உங்களின் உதவியை அடுத்த வருடம் கூறி பெருமை பேசாதீர்கள்,,

கஷ்ட காலங்களில் உறுதுணையாக இருங்கள்

அவர்கள் நோய்வாய் பட்டிருக்கும் பொழுது அல்லது சிலர் தூக்க காரியங்களிலும் இருக்கும் பொழுது அவர்களுக்கு தைரியம் கொடுத்து அவர்களுக்கு உதவியாக கூட இருங்கள்,

 இதன் மூலம் அனைவரிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கும் உங்களிடம் அனைவரும் சகஜமாக பழக விரும்புவார்கள்…

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *