கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டையா? தீர்வு என்ன?
கணவன்-மனைவிக்குள் சண்டையா? தீர்வு என்ன?
முன்பெல்லாம் கணவன் மனைவிகள் அன்யோன்யமாக இருப்பார்கள் மனைவி கணவனிடத்தில் மிகவும் அமைதியாகவும் மரியாதையாகவும் இருப்பார்,
இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் செய்யும் மற்றும் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் கூட தினசரி கணவன் மனைவிகள் எலியும் பூனையுமகவே இருப்பார்கள்.
காரணம் என்ன எப்படி சரி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம்
புரிந்து கொள்ளுதல்
கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் கண்டிப்பாக நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
கணவன் வெளியில் வேலைகளுக்கு பலவிதமான மனச்சுமைகளையும் உடல் சுமைகளையும் ஏற்றிக்கொண்டு தான் வீட்டிற்கு வருவார்கள். அதனை வீட்டு வாசலிலே அந்த பிரச்சனையெல்லாம் கணவன் செறுப்புடன் சேர்த்து கழற்றி வைத்துவிட்டு உள்ளே வர வேண்டும்..
அந்த சமயத்தில் மனைவி மேலும் அவர் மீது கோபத்தைக் காட்டாமல் கனிவுடன் கவனிக்க வேண்டும்,
அதேபோல் மனைவியும் கணவர்களுக்கு சளைத்தவரில்லை அவர்களும் வீட்டில் காலை முதல் இரவு வரை அன்றாட வேலைகளை சக்கரம் போல் வீட்டை சுற்றி வேலை செய்து கொண்டேதான் இருப்பார். இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து போவது சுமூகமான மன வாழ்க்கையை தரும்..
விட்டுக்கொடுத்து போகவேண்டும்
அனைவருக்கும் தெரிந்த ஒன்று கணவன் மனைவிகளுக்கு சண்டை வர காரணம் ஈகோ பிரச்சனை தான் என்று.
உனக்கு மட்டும்தான் ஈகோ எனக்கு ஈகோ இல்லை,
என்று கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் குற்றம் சாட்டிக் கொண்டே தான் இருப்பார்கள், ஆனால் அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்,
நமது கணவன் தானே கணவனும், நமது மனைவி தானே என்று கணவனும் சண்டையை விட்டுக் கொடுத்து விட்டால் பேச்சு வளராது சண்டையும் வலு பெறாது,
முக்கியத்துவம்
கணவன் மனைவியைப் பொறுத்தவரை இருவரிடத்திலும் முக்கியத்துவம் காட்டவேண்டும், வீட்டில் நேரத்தை செலவிட வேண்டும்.
குறிப்பாக மனைவி பிறந்தநாள், கணவன் பிறந்தநாள், திருமண நாள், குழந்தைகள் மீது கவனம் செலுத்துவது, வீட்டுப் பொறுப்புகளை எடுத்து போட்டு செய்வது, போன்றவற்றில் அக்கறைகட்ட வேண்டும், ஏனென்றால் அவர்கள் உங்களிடம் தான் எதிர்பார்ப்புகளை காட்ட முடியும்..
நம் வீடு போல மாமனார் வீட்டிலும் அக்கறை காட்டுவது,
மாமனார் மாமியார் வீட்டை அல்லது உறவினர்களை தரக்குறைவாக நினைக்கவோ அதை பற்றி பேசவோ கூடாது.
அக்கறை
கணவர்மார்கள் மனைவி உடல்நலத்தில் கண்டிப்பாக அக்கறை காட்ட வேண்டும் மாதவிலக்கு சமயத்தில் அல்லது உடல்நலம் சரியில்லாத நேரத்தில் மனைவிக்கு ஆதரவாக உதவிகள் செய்ய வேண்டும்,
அவரிடம் நடந்து கொள்ள வேண்டும். வீட்டுப் பணிகளை முன்னின்று செய்ய வேண்டும்,
பொருளாதார பிரச்சனை
வீட்டில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி நடக்கும் சண்டைக்கு முக்கிய காரணம் பொருளாதாரப் பிரச்சினையே,
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வீட்டில் கிடைக்கக்கூடிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தினால் பிரச்சினையில்லை,
ஆனால் நமது தேவைக்காக கடன் வாங்கியோ EMI எப்படியோ பொருட்களை வாங்கும் பட்சத்தில் அதிகப்பணம் விரயமாக்க வேண்டியிருக்கும்,
இதன் காரணத்தினால் வீட்டில் பணப் பிரச்சினைகள் கதவைத் தட்டிக் கொண்டு ஹாலில் ஹாயாக வந்து படுத்துக்கொள்ளும்.
இதன் காரணமாக கணவன்-மனைவிக்குள் சண்டைகள் வரும்,,
இதற்கெல்லாம் தீர்வுகள்:
கணவன் மனைவியை பொருத்தவரை எல்லா விசயத்திலும் சண்டைகள் வரத்தான் செய்யும் அதற்கு கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் வீட்டு நிலைமை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கொருவர் கண்டிப்பாக போட்டி பொறாமைகள் காட்டாமல் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும்,
நம்ம மனைவி தான் என்று கணவனும் நம்ம நம்ம கணவன்தான் என்று மனைவியும் இணைத்துவிட்டால் வீட்டில் முக்கால்வாசி சண்டைகள் முடிவுக்கு அந்த நிமிடமே வந்துவிடும்..
வெளியில் இருக்கும் கோபத்தை வீட்டிற்கு உள்ளே கண்டிப்பாக காட்ட கூடாது. சண்டை களுக்கிடையே சிறுசிறு பரிசுகள் கொடுத்து சண்டையை முடித்துக் கொள்ளலாம்,
நாள்பட சண்டைகளை மூஞ்சை திரும்பிக்கொண்டு இருந்துவிட்டால் சண்டையும் முடியாது வாழ்க்கையும் வாழ முடியாது,
எனவே, கணவன் மனைவிகள் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டு சிறுசிறு சண்டைகளையும் பிரச்சினைகளையும் இருவரும் கைகோர்த்து எதிர்த்து நின்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும்..