ஒல்லியாக இருப்பவர் குண்டாக வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்கு தான்,,,

 ஒல்லியாக இருப்பவர் குண்டாக வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்கு தான்..

ஒல்லியாக இருப்பவர் குண்டாக வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்கு தான்,,,

பொதுவாக நம்மில் பலர் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள் அதற்குக் காரணம் அவர்களின் மரபணு மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடாக கூட இருக்கலாம் , ஆனால் நம் உயரத்திற்கு ஏற்ப வெயிட்டும் இருக்க வேண்டும்,

ஒரு சிலர் டேபிள் ஃபேன் ஐ போட்டாலே பறந்து விடுவது போல் இருக்கிறாய் என கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும் உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்,,

மரபணு பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாது என்றாலும் இடையில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கும் பிரச்சனையை இயற்கை முறையில் கண்டிப்பாக சரி செய்யலாம்,

அவற்றில் என்னென்ன என்பதை இந்த  பதிவில் நாம் பார்க்கலாம்,

உடல் மெலிந்து இருக்க காரணம்,

சிறுவயது முதலே ஒரு சிலர் நன்றாக சாப்பிட மாட்டார்கள், அல்லது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை குறைவான அளவுகளே சாப்பிட்டு இருப்பார்கள்,

ஒரு சிலர் வயிறு முட்ட நான் சாப்பிடுகிறேன், ஆனாலும்கூட உடம்பில் சதை போடவே மாட்டேங்குது, என்று சிலர் புலம்பித் தள்ளுவார்கள்.

அவர்களுக்கும் சேர்த்து ஒரு 11 முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இவற்றை பின்பற்றினாலே கண்டிப்பாக உடம்பில் வெயிட் போடும்.. அவற்றை என்னவென்று பார்ப்போமா…!

1)பால் மற்றும் தேன்

பாலுடன்  ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரவு மற்றும் காலை வேளைகளில் குடித்து வந்தால் உடம்பில் வெயிட் போடும், தேனில் பேரிச்சை பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

2)எள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு இழைத்தவனுக்கு எள்ளு, என்ற பழமொழி உண்டு, அந்த பழமொழிக்கு ஏற்ப எள் ஐ உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் உடலில் வெயிட் போடும்.

3)பரங்கிக்காய்

பரங்கிக்காயை அடிக்கடிகூட்டு அல்லது பொரியல், அல்லது குழம்பில் சேர்த்துவந்தால் உடல் பருமனடையும்,

4)பாதாம் பிசின்

பாதாம் பிசினை இரவில் ஊறவைத்து காலையில் மென்று தின்றால் உடல் பருமனடையும்

5)பசலைக்கீரை

பசலைக்கீரையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்பு கண்டிப்பாக எடைபோடும்,

6)ஆட்டு இறைச்சி,

ஆட்டு இறைச்சியை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் அதில் இருக்கும் புரத சத்தானது உடம்பிற்கு நல்ல புரதத்தை கொடுத்து சதை வளர்ச்சியை அதிகரிக்க உதவும்..

7) மீன், முட்டை,

மீன், மற்றும் கோழி முட்டைகளில் புரதசத்து நிறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் அடிக்கடி இவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கண்டிப்பாக கூடும், அதுமட்டுமில்லாமல் நாட்டுக்கோழி முட்டை மிகவும் சிறந்தது,,

8) பாதாம் பிஸ்தா வேர்கடலை

பாதாம் பிஸ்தா வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் கிடைக்கும்,,

கொண்டைகடலையை சுண்டலாக செய்து சப்பிட்டலாம், அல்லது இரவில் கொண்டைகடலையை ஒரு துணியில் கட்டி முளைகட்டியும் சாப்பிடலாம்.. முளைகட்டிய பயிர் அனைத்துமே நல்ல பலனை தரும்..

9) ஐஸ்கிரீம், ப்ரூட் சாலட், மில்க் ஷேக்

ஐஸ்கிரீம் மற்றும் ஃப்ரூட் சாலட், மில்க் ஷேக் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்,,

10)காய்கறிகள் மற்றும் பழங்கள்

பழங்கள் மற்றும் வேகவைத்த காய்கறிகள் எப்போதுமே உணவில் தவிர்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்,

இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடம்பிற்கு நல்ல பலனைத் தரும்..
பழங்களை ஜூஸ் ஆகவும் பருகலாம்,

11) இனிப்பு பலகாரங்கள்

இனிப்பு பலகாரங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடம்பிற்கு நல்ல பலனைத் தரும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்

ஒல்லியாக இருப்பவர் குண்டாக வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்கு தான்,,,

ப்ரைடு ரைஸ் , மற்றும் எண்ணெயில் பொரித்த பலகாரங்கள் அறவே சாப்பிடக் கூடாது, ஜங்க் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

பீட்சா மற்றும் பர்கர் உணவுகள் சாப்பிட்டால் கெட்ட கொழுப்புகளே உடலில் சேரும், அதுமட்டுலில்லாமல் பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள் தவிர்க்க வேண்டும்.

உடற்ப்பயிற்ச்சிகள்

ஒல்லியாக இருப்பவர் குண்டாக வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்கு தான்,,,
என்ன தான் சாப்பாட்டில் வெளுத்து கட்டினாலும்  உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்ப்பயிற்ச்சிகள் இருக்க வேண்டும்,, இல்லை என்றால் தேவைக்கு அதிகமாக உடல் பருமன் ஆகிவிடும்,,

மேலே குறிப்பிட்டுள்ள ஆரோக்யமான இயற்கை உணவுகளை  சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்,,

இந்த தகவல் ஆனது உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்,

இந்த தகவலை பகிர கீழே உள்ள ஷேர் பட்டனை அழுத்தி  உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.. நன்றி..

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *