உங்கள் வீட்டில் கொசு தொல்லையா, இயற்கை முறையில் கொசுவை விரட்டலாம் வாங்க…

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா, இயற்கை முறையில் கொசுவை விரட்டலாம் வாங்க…

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா, இயற்கை முறையில் கொசுவை விரட்டலாம் வாங்க...

  இன்றைய காலகட்டத்தில் கொசுவினால் டெங்கு, மலேரியா, போன்ற ஏகப்பட்ட நோய்கள் நமக்கு வருகின்றது, அதுமட்டுமில்லாமல் இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டமும் பட வேண்டியிருக்கிறது,,  

கொசுவை விரட்ட எண்ணற்ற கொசுவர்த்தி சுருள், மற்றும் எலக்ட்ரிக் கருவிகள், கொசு பேட் என இருந்தும், கொசுவை விரட்டிய பாடில்லை,  

பாதிப்பு:

கொசுவர்த்தி சுருள், மற்றும் வேற லிக்விட் ஐட்டம்களை உபயோகப்படுத்தும் பொழுது அது நமது சுவாசத்திற்கு கேடு தான் விளைவிக்கும், இதனால் சுவாச பிரச்சனைகள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்  பிரச்சனைதான்,  

முன்னெல்லாம் கொசுவை விரட்ட நமது பாட்டி மற்றும் தாத்தாக்கள், கொசுவர்த்தி போன்ற எந்த ரசாயண பொருட்களும் பயன்படுத்தியதில்லை, மாறாக நொச்சி இலை, வேப்ப இலை இவைகளைக் கொண்டு தீ மூட்டி மூட்டம் போடுவார்கள், அந்த புகையின் காரணமாக கொசுக்கள் மற்றும் பூச்சிகள் நமது பக்கம் அண்டாது,,

வெள்ளி செவ்வாய் பூஜையின் அறிவியல்:

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா, இயற்கை முறையில் கொசுவை விரட்டலாம் வாங்க...

வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிகளில், பூஜையில் சாம்பிராணிப் புகை போடுவார்கள், அதுமட்டுமில்லாமல் விளக்கெண்ணெயில் விளக்கு ஏற்றுவார்கள், இதிலிருந்து வரும் ஒருவிதமான சுவையானது பூச்சி மற்றும் கொசுக்கள், அண்டாமல் இருப்பதற்கு செய்வதாகும்,, இப்படி செய்வதால் அந்த வாசனைக்கு சிலந்தி வலை கட்டாமல் இருக்கும்..  

வேப்பஎண்ணெய் கற்பூரம்:

வேப்ப எண்ணெய் ஒரு டம்ளர் எடுத்து அதில் சிறிது கற்பூரத்தை கலந்து கொசுவர்த்தி லிக்யூட் பாட்டிலில் ஊட்டி ஊற்றி அதனை கொசுவர்த்தி எலக்ரிக் மிஷினில் போட்டு பயன்படுத்தினால் அந்த வாசனையில் கொசு வீட்டிற்க்குள் வராது..


எழுமிச்சை மற்றும் கிராம்பு:

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா, இயற்கை முறையில் கொசுவை விரட்டலாம் வாங்க...

கொசு நம்மை கடிக்க காரணம் நம்மிடம் இருந்து வெளிவரும் கார்பன் -டை- ஆக்சைடு வாசனையைக் கொண்டு தான் நம்மை கடிக்க வருகிறது..

எலுமிச்சையை பாதியாக கட் செய்து அதில் 10 கிராம்பை சொருகி வைத்தால் அதிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்சைடுக்கு கொசு ஆனது ஈர்க்கப்பட்டு நம் பக்கம் அண்டாமல் இருக்கும்,,


தேங்காய் நார்:

தேங்காய் நாரினை மாலை நேரங்களில் கொளுத்தி அதன் புகையை வீட்டினுள் காட்டினாள் கொசுக்கள் வராது. அந்த புகை நமக்கு இந்தவித தீங்கும் விளைவிக்காது,,  

கருப்பூரம்:

கற்பூரத்தை எடுத்து தண்ணீரில் கலந்து வீட்டில் தெளித்தால் அந்த வாசனைக்கு ஒரு கொசு கூட வராது,,


வேப்ப இலை மஞ்சள்:

  தேங்காய் கொட்டாங்குச்சியில் எரியவிட்டு அந்த தீயில் சிறிது வேப்ப இலையை போட்டு அந்த நெருப்பின் மேல் சிறிது மஞ்சளை தூவினால் அதன் புகைக்கு கொசுமட்டுமில்லாமல் எந்த பூச்சியும் வராது..  

மூலிகை சாம்பிராணி:

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை சாம்பிராணி வாங்கி வீட்டில் புகை போட்டால் கொசுக்கள் நம்மை நெருங்காது..   இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும்..   இந்த பதிவு நண்பர்களுக்கு பகிர கீழே உள்ள ஷேர் பட்டனை அழுத்தி ஷேர் செய்யவும் நன்றி….  

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.