ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னையில் சில தளர்வுகள், மற்றும் சில கட்டுபாடுகளுடன் கடைகள் திறக்கலாம்,,

 ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னையில் சில தளர்வுகள், மற்றும் சில கட்டுபாடுகளுடன் கடைகள் திறக்கலாம்,, அவை என்னென்ன?

ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னையில் சில தளர்வுகள், மற்றும் சில கட்டுபாடுகளுடன் கடைகள் திறக்கலாம்,,

ஊரடங்கு:

கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதலே தமிழகம் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது, சென்னையில் ஜூன் 19ம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு விதிக்கபட்டிருந்தது,,

இதன் விளைவாக மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியே இல்லாத காரணத்தினால் வேலைக்கு செல்வோர் கூட வேலைக்கு செல்லாமல் இருந்தனர்,,

வேலைக்கு சென்றவர்கள்:

ஊரடங்கு காரணமாக பணிக்கு செல்வோர் யாரும் அலுவலகத்திற்க்கு செல்வது இல்லை, பணியிடத்திற்கு அருகே அதுவும்  நடந்து செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட காரணத்தினால், குறைந்த அளவிலேயே பணியாட்கள் வேலைக்கு சென்றார்கள்,

கடைகள்:

இதன் காரணமாக மக்கள் யாரும் வெளியில் வராததால் அனைத்து வியாபார கடைகளும் மூடப்பட்டிருந்தது காய்கறிகள் அத்தியாவசிய தேவைக்கான  பொருட்கள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையில் இதுவரை இயங்கியது,,

தளர்வுகள்:

தற்போது பொதுமக்கள் அவதிக்குள்ளாகி காரணத்தினால்  கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள்  ஜூலை 6ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது,

கடைகள் மற்றும் ஜவுளி வியாபாரம்:

கடைகள் மற்றும் வியாபாரங்கள் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை நடைபெறலாம், பெரிய மால்கள் இல்லாமல் நடுத்தரமான வணிக வளாகங்கள் ஜவுளிக்கடை, நகைக்கடை, மற்ற வியாபாரங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

ஹோட்டல் மற்றும் தேநீர் கடைகள்:

உணவு மற்றும் தேநீர் கடைகள் போன்றவை, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
இயங்கலாம் என்றும் , இவை சென்னைக்கு உட்பட்ட உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இந்த நேரக்கட்டுப்பபாடு மற்றும் பாதுகாப்பினை புரிந்துகொண்டு பயனடையவும் மற்றும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும்,, நன்றி

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *