என்றும் இளமையாக

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…

என்றும் இளமையா இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்...
 எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குதான் இருக்காது…
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களை இளமையாக காட்டிகொள்ள வேண்டும் என்று ஏகபட்ட முயற்ச்சிகள் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்..
ஆனால் முடிவு என்னவோ நம்மை 30 வயதிலேயே முதிர்ந்த தோற்றம் தான் அளிக்கிறது..

வயது முதிர்வு ஆனாலும் கூட சிலர் எப்போதும் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள்,  அவர்களின் இளமை தோற்றதிற்க்கு காரணம் அவர்களின் சரியான உடற்ப்பயிற்ச்சி மற்றும் உணவுகட்டுப்பாடுதான் காரணம்,,

எல்லா பெண்களுக்கும் நதியா மாதிரியும் எல்லா ஆண்களுக்கும் அரவிந்சாமி  மாதிரியும் என்றும் இளமையாக இருக்வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதற்கான வழிமுறைகளை பார்ப்போமா?

உணவு கட்டுப்பாடு:

உணவில் கட்டுப்பாடு இருந்தால் தான் ஆரோக்யமாக இருக்க முடியும்,
முறையான சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும்.. தேவையான அளவுள்ள கலோரிகள் மட்டுமே உடலுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்,

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை போல வயிறு முட்ட சாப்பிடுவதை தவிற்க்க வேண்டும்,  கொழுப்புக்கள் அதிகமான உணவுகளை சாப்பிட கூடாது..

ஜங்க் உணவுகள்:

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்...
 குறிப்பாக ஜங்க் உணவான, ப்ரைடு ரைஸ், பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடகூடாது.. பாட்டிலில் அடைக்கபட்ட குளிர்பானங்களை அறவே தொடக்கூடாது.. பானி பூரி, எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகள், இவை அனைத்தும் நாம் சாப்பிட்டால் நாம் கண்டிப்பாக பெரிசுதான்..

மது மற்றும் போதை பொருட்கள்:

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்...
மது உடலில் ஈரல், சிறுநீரகம் போன்றவற்றை நேரடியாக தாக்கும் அது மட்டும் இல்லாமல் ஈரலில் இருந்து ரத்த ஓட்டத்தை தடுக்கும்,,
 போதை பொருளான புகையிலை பாக்கு போன்றவை இதேபோல் தீமைகளே விளைவிக்கும், மற்றும் உடலுக்கு தேவையான மெலனின் சுரப்பி சுரப்பதை தடை செய்யும் என்பதால் முகம் மற்றும் தோல்  சுருங்கி சீக்கிரமே முதுமை தோற்றத்தை கொடுக்கும்..

சாப்பிட வேண்டியஉணவுகள்:

காய்கறிகள்:

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்...
 பசலைக்கீரையில் இருக்கும் சத்துக்கள் இளமையை அதிகரிக்க உதவும், எனவே பசலைக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்..
பீன்ஸில் இருக்கும் ஒருவிதமான ரசாயனமானது தோலுக்கு நன்மைபயக்கும் ஒன்றாகும்,, உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டால் இளமையை தொடரலாம்,,
உணவில் எப்போதுமே காய்கறிகளை தவிர்க்க கூடாது. அனைத்து காய்கறிகளுமே  என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. காய்கறிகள் அதிகம் சாப்பிட்டு  சாதம் குறைவாக சாப்பிடுவது நலம்..

பிராய்லர் கோழி:

பிராய்லர் கோழிகள் சீக்கிரமாக வளர செயற்க்கை தீவனங்கள் அதிகம் தரப்படுவதால் அதை உன்னும் நமக்கும் அதன் வீரியம் உடலில் சேர்ந்து சீக்கிரம் உடல் வளர்ச்சியடைந்து விடுகிறது, இதனால் சீக்கிரமே நாமும் முதிர்ச்சி அடையகூடும்,  கூடிய வரை நாட்டுக்கோழி சாப்பிடுவது நலம்,,

உடற்ப்பயிற்ச்சி:

என்னதான் உணவில் கட்டுப்பாடு இருந்தாலும், உடலில் இருக்கும் தசைகள் வழுபெறவும், உடலில் இருக்கும் அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும்  உடற்ப்பயிற்ச்சி முக்கியம்,, உடற்ப்பயிற்ச்சியின் போது உடலில் வியர்வை மூலம் நச்சுக்கள் வெளியேறி நம்மை புத்துணர்ச்சியாக வைக்க உடற்ப்பயிற்ச்சி தினமும் செய்ய வேண்டும்,,

யோகாசனம்:

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்...
யோகாசனம் என்பது உடலில் இருக்கும் அனைத்து உள் உறுப்புகளையும் வலிமைபடுத்தவும், ஆரோக்கியமாக வைத்துகொள்ளவும் உதவுகிறது.. நம்மால் முடிந்த ஆசனங்களை தினமும் செய்வது இளமையை காக்கும்..

எண்ணைக்குளியல்:

எண்ணைகுளியல் ஆனது உடம்பில் தோல்கள் வறட்சியை தடுக்கும், மற்றும் தோல்களில் இருக்கும் நுண் துளைகளில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்,

பயித்தம் பருப்புமாவு, கடலை மாவு,

முகம் மற்றும் உடம்பிற்க்கு சோப்பிற்க்கு பதிலாக பயித்தம் மாவு அல்லது கடலை மாவினை கொண்டு தேய்த்து குளித்தால் தோல் பளப்பாக இளமையுடன் இருக்க உதவும்,,

முடி அழகு என்பது இளைமைக்கு ஒன்றாகும் முடியை சரியாக பராமரிக்க வேண்டும். ஷாம்புக்கு பதிலாக சீயாக்காய் உபயோகிக்கலாம்..

தண்ணீர்:

 தினமும் சராசரியாக 4 முதல் 5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல்  நம் உடலில் நீர்ச்சத்து தான் நம்மை எப்போதும் இளமையாக வைக்க உதவுவதால் கண்டிப்பாக தண்ணீரை குடிக்க வேண்டும்..

பழங்கள்:

ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளது, அந்தந்த காலங்களில் கிடைக்கும் பழங்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அல்லது பழச்சாறாக  கூட அருந்தலாம்,
இதெல்லாம் என்னால செய்ய  முடியாது,  அசைவம் இல்லாம இருக்கவே முடியாது நாக்கு நம நமன்னு இருக்கும்னா உங்களால முடிஞ்ச வரைக்கும்  கடைபிடிப்பது நல்லது,,
 ஏதாவது ஒன்ன இழந்தா தானே ஒன்னு கிடைக்கும்,,
எனவே மேலே குறிப்பிட்டுள்ளவறை கடை பிடித்து ஆரோக்யமாக இளமையாக வாழுங்கள்,,
இந்த தகவல் பிடித்திருந்தால் லைக் செய்து நண்பர்களுக்கு பகிர கீழே உள்ள பட்டனை அழுத்தி பகிரவும்..
நன்றி..
Share


copy the below code

One thought on “என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *