உங்களுக்கு அல்சர் இருக்கிறதா? தீராத வயிற்று வலியா?
இதோ..! வீட்டிலேயே இயற்கை முறையில் மருத்துவம்..
அல்சர் என்பது குடலில் உண்டாகும் புண் ஆகும்,,
இது நாளடைவில் அதிகமாகி வயிற்றில் கேன்சர் ஏற்படவும் வாய்ப்புள்ளது,,
அல்சர் வந்தால் நேர நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள்,
ஆனால் ஒரு சிலர் நேரா நேரத்திற்கு சாப்பிட்டும் தீராத வயிற்று வலியால் அவதிப்படுவோர் ஏராளம்,,
அப்படிப்பட்ட வயிற்று வலிக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்…
காரணம்:
அல்சர் உண்டாக காரணம் பாட்டினி கிடைப்பதால், மற்றும் வயிறு பசிக்கும் பொழுது சாப்பிடாமல் இருப்பதும் தான்,
அதாவது பசியானது, ஒருவிதமான சுரப்பிகள் சுரப்பதால் ஏற்படுகிறது, சுரப்பிகள் ஒருவகையான ஆசிட் என்று சொல்லலாம் பசிக்கும் பொழுது இந்த சுரப்பி நாம் சாப்பிட்ட சாப்பாட்டை மறுசுழற்சி செய்வதற்கு உதவுகிறது,,
இதனால்தான் கடினமான அசைவ உணவும், அனைத்தும் வயிற்றில் கரைக்கப்படுகிறது, இந்த சுரப்பி சுரக்கும் சமயத்தில், நம் வயிற்றில் எந்த உணவும் இல்லாதபோது சுரப்பி குடலை சுற்றி இருக்கும் பகுதியை சென்றடையும்,,
ஆனாலும்கூட நமது குடலில் இந்த சுரப்பியில் இருந்து குடலை பாதுகாக்க குடலை சுற்றி சளி போன்ற படலம் பாதுகாக்கும்,,
ஒரு முறையும் இந்த சுரப்பி சுரக்கும் பொழுது வயிற்றில் உணவு ஏதும் இல்லை என்றால் அந்த சளி போன்ற படலத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து குடலில் சிறிய புண்ணை உண்டாக்கிறது,,
இது நாளடைவில் அதிகரித்தால் குடல் முழுவதும் பரவி அதிகமான வலியை தரும் அல்சர் ஆகிறது,,
தடுக்கும் முறை:
நேரா நேரத்திற்கு சாப்பிட்டாலும் கூட அல்சர் வருது என்று சொல்வார்கள்.
உண்மையில் அல்சரை தடுக்க நேரா நேரத்திற்கு சாப்பிடக்கூடாது, பசித்தால் தான் சாப்பிடுவேண்டும்,,
ஒரு சிலருக்கு காலை பத்து இட்லி சாப்பிட்டு இருந்தாலும் பதினோரு மணிக்கு ஆரம்பித்துவிடும்,,
ஆனால் அவர் ஒரு மணிக்கு தான் மதிய சாப்பாடு சாப்பிடுவார். அவருக்கு கண்டிப்பாக வயிற்றுவலி இருக்கும்,
முதலில் இதற்கு காரணம் நமது வயிற்றில் சுரக்கும் சுரப்பியானது காலை சாப்பிட்டவுடன் அந்த உணவினை கூழாக்கிவிட்டு அது வயிற்றில் சளிப் படலத்தை தொடுகிறது என்று அர்த்தம்,,
அந்த நேரத்தில் ஏதாவது சிற்றுண்டிகளை தினமும் எடுத்துகொண்டால், சீக்கிரமே அல்சர் குணமாகிவிடும்,,, அதுபோல எப்பொழுதெல்லாம் உங்களுக்கு பசி ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஏதாவது சாப்பிட வேண்டும்,,
இயற்க்கை மருந்துகள்:
கோவை பழம் மற்றும் இலை:
அல்சரினால் வரும் தீராத வயிற்று வலியை போக்க சிறப்பான இயற்கை மருந்து கோவைப்பழம் ஆகும், கோவைப்பழம் ஆனது அதில் இருக்கும் ஒருவிதமான நன்மை பயக்கும் ரசாயனம் ஆனது நம் வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்றும் வல்லமை படைத்தது,,
இதனால் கோவைப்பழமாகவோ அல்லது கோவை இலையை கீரை சாறு போல வைத்தோ சாப்பிட்டால் உடனடியாக வலி நின்று தீர்வு கிடைக்கும்,,
மாதுளம் பழம்:
மாதுளம்பழம் ஆனது ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல், வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்றும் சக்தி உடையது,, மாதுளம்பழத்தை, பழமாகவோ அல்லது சீனி சேர்க்காமல் ஜூஸ் ஆகவோ குடிக்கலாம்,,
கருப்பு திராட்சை:
கருப்பு திராட்சையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது, இதனில் உடலில் குளிர்ச்சியை மட்டுமில்லாமல், குடலில் இருக்கும் புண்களையும் ஆற்றும் திறன் படைத்தது,,
தேங்காய் பால்:
தேங்காய்பாலில் இருக்கும் கொழுப்பு ஆனது, உடலுக்கு நன்மை பயக்கும்
இதனால் அல்சர் இருப்போர், தேங்காய் பாலை அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்,,,
தண்ணீர்:
தண்ணீர் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு தேவையான 5 முதல் 6 லிட்டர் குடிக்க வேண்டும்.. இதனால் உடலில் சுரக்கும் அமிலமானது தன்ணீருடன் கலந்து வீரியம் குறையும்..
மணித்தக்காளி:
மணித்தக்காளி ஆனது இயற்க்கை அளித்த வரபிரசாதம் ஆகும்,, இது வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது,,
இதன் இலையை கீரையாக உணவில் சேர்த்து சாப்பிட்டால் தீராத வயிற்றுபுண் தீரும்..
இந்த இயற்கை மருந்துகள் அனைத்துமே அல்சர் வயிற்று வலி மற்றும் புண்களை தடுத்து வைக்குமே தவிர முற்றிலுமாக குணப்படுத்தாது,,
மேலும் குணமாக வேண்டும் என்றால், பசிக்கும் பொழுது சரியாக உள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முற்றிலும் குணப்படுத்த முடியும்,,
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும் நண்பர்களுடன் பகிர கீழே உள்ள ஷேர் பட்டனை அழுத்தி ஷேர் செய்யவும்,
நன்றி,,,