சாப்பிட்ட உடன் ஏன் குளிக்ககூடாதுனு சொல்ராங்க தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..

சாப்பிட்ட உடன் ஏன் குளிக்ககூடாதுனு சொல்ராங்க தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..

 வீட்டில் பெரியவங்க சாப்பிட்டோன குளிக்காதனு சொல்வாங்க காரணம் என்னனு தெரியுமா?

சாப்பிட்ட உடன் ஏன் குளிக்ககூடாதுனு சொல்ராங்க தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..

பொதுவாக வீட்டில் பெரியவர்கள் நம்மை சாப்பிட்டவுடன் குளிக்க கூடாதுனு சொல்வாங்க ஆனா இப்போலாம்  பலர் வேலைக்கு சென்று வேலை பளுவின் காரணமாக சாப்பிட்ட பிறகு உடல் அசதியாக இருக்குனு சொல்லி  குளிப்பார்கள்,

அல்லது விடுமுறை நாட்களில் காலையில் உணவு உண்டு விட்டு உடனடியாக குளிக்கச் சென்று விடுவார்கள், செய்வதால் உடலில் என்னென்ன தீங்கு விளைவிக்கிறது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்..

உணவு:

உணவு என்பது ஒரு மனிதனுக்கு அன்றைய நாள் முழுவதும் தனக்கு தேவையான கலோரிகளை கொடுக்க கூடியவையாகும், இது மடுமில்லாமல் உணவில் சுவை மற்றும் சத்துக்கள் என அனைத்தும் மனித உடலுக்கும் மனதிற்கும் சக்தியை தரக்கூடியது,

சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது:

குளிப்பது என்பது உடலிலுள்ள வெப்பத்தை தணிக்கக் கூடிய செயலாகும் இதனால் நாம் குளிக்கும் பொழுது நம் உடலில் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் தண்ணீரால் குளிர்விக்கப்படுகிறது,

சாப்பிட்ட உடன் ஏன் குளிக்ககூடாதுனு சொல்ராங்க தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..

இதனால் உடலில் இருக்கும் வெப்பமானது குறைகிறது,

உணவு செரிப்பதற்கு முக்கியமான காரணம் உடம்பில் இருக்கும் வெப்பம் ஆகும் வெப்பமானது சரியான நிலையில் இருக்கும் பொழுது உடம்பில் இருக்கும் சுரப்பிகள் சுரக்கும்,

மற்றும் ரத்த ஓட்டம் சீராகும் இவை அனைத்தும்சரியாக இயங்கும் பொழுது உடல் செரிமானம் சரியாக நடக்கும்.

நாம் சாப்பிட்டுவிட்டு குளிப்பதனால் உடலில் உள்ள வெப்பம் குறைந்து செரிமானம் ஆகாமல் உணவு குடலில் தங்கி வாயுக்களை உற்பத்தி பண்ணுகிறது இதனால் மலச்சிக்கல் குமட்டல் போன்றவை ஏற்படுகின்றன,,
ஒரு சில நேரங்களில் உடல் அசதியும் ஏற்படும்,, இதனால் அசௌகரியமான மனநிலை உண்டாகும்,

குளிக்கும் முறை:

உணவு உண்பதற்கு  அரைமணி நேரத்திற்க்கு முன்னரே குளிப்பதுதான் சரியானது, நாம் குளிப்பது உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காகவும், உடல் சூட்டினை சீராக வைத்துக் கொள்வதற்காக ஆகும்,,

இதில் சாப்பிடுவதற்கு முன்பே குளித்துவிட்டு சாப்பிட்டோம் என்றால் செரிமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது செரிமானம்  சீராக இயங்கும்,,

உணவு உண்டபின் எவ்வளவு நேரம் கழித்து குளிக்கலாம்:

பொதுவாக உணவு உண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம் என்று ஆயுர்வேதம் குறிப்புகள் சொல்கிறது,

நாம் சாப்பிடும் உணவில் அசைவ மற்றும் சைவ உணவாக இருந்தாலும் சரி உணவுகள் சரியாக செரித்து முடிப்பதற்கு 2  மணி நேரம்  ஆகும், எனவே உணவு செரித்த பின் குளிப்பது உடலுக்கு நல்லது..

சாப்பிட்டுவிட்டு செய்யக்கூடாதவை:

சாப்பிட்ட பிறகு ஒரு சில விஷயங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாது இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்றாகும் அவற்றில்..

தூக்கம்:

சாப்பிட்ட உடன் ஏன் குளிக்ககூடாதுனு சொல்ராங்க தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..

பெரும்பாலனோர் சாப்பிட்டவுடன் ஒரு குட்டித் தூக்கம் போடலாம் என்று தூங்குவார்கள் அல்லது இரவில் சாப்பிட்டவுடன் மல்லாந்து விடுவார்கள்,

அது மிகவும் தவறு, தூங்கும்போது உடலில் இயக்கம் குறைவாக இருப்பதனால் சாப்பிட்ட உணவு வயிற்றுப் பகுதியிலேயே தங்கிவிடும், இதனால் கொழுப்புக்கள் உடலில் தங்கி உடல் பருமன் மற்றும் தொப்பை வர காரணமாகிறது,

உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது:

சாப்பிட்டுவிட்டு கடினமான உடற்பயிற்சிகள் செய்வார்கள், உடற்பயிற்சிகள் செய்யும் பொழுது உடல் சூடாகும், மற்றும் ரத்த ஓட்டம் அதிகமாகும் இதனால் உடலில் அசௌகரிய நிலை ஏற்படும்,

சாப்பிட்டுவிட்டு கொஞ்ச தூரம் வாக்கிங் போயிட்டு வரலாம், அதனால் கேடு இல்லை ஜாகிங் போகக்கூடாது,,

சரியான நேரத்தில் சாப்பிடுவதினால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி செரிமானம் ஆனது சீராக இருந்தாலே போதும், உடல் ஆரோக்கியமாக இருக்கும், முகம் பொலிவாகும், மனது சந்தோசமாகவும் இருக்கும்,,

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *