Apple மற்றும் Samsung நிறுவனங்களை நொறுக்க வருகிறது Oppo Find X6 Pro!

உலக அளவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான Apple மற்றும் Samsung நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக BBK Electronics நிறுவனத்தின் Oppo நிறுவனம் மிகப்பெரிய வசதிகளுடன் அதன் Find X6 Pro போனை வெளியிடுகிறது.

ஹைலைட்ஸ்:Oppo Find X6 Pro

  • Oppo Find X5 Pro மற்ற விஷயங்களில் சிறந்த போனாக இருந்தாலும் Zoom கேமரா வசதியில் குறைந்த அளவு திறன் கொண்டுள்ளது.
  • விரைவில் வெளியாகவுள்ள Samsung S23 மாடலில் 200MP கேமரா வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தற்போது ஸ்மார்ட்போன்களின் காலம் என்றே கூறலாம் மக்கள் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய அளவு செலவு செய்கிறார்கள்.

அந்த வகையில் இதில் மக்கள் மத்தியில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக சீனாவின் ஒப்போ நிறுவனம் மிகப்பெரிய கேமரா சென்சார் வசதியுடன் அதன் Oppo Find X6 Pro ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிடவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வரும் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனவும் இதில் பின்பக்கம் ஒரு இன்ச் ரியர் கேமரா வசதி இடம்பெறும் என்றும் விவரம் வெளியாகியுள்ளது.


இதன் டாப் வேரியண்ட் Sony IMX 989 கேமரா பயன்படுத்துகிறது. இதன் அதீத தரம் காரணமாக மற்ற ISOCELL சென்சார் கேமெராவை எல்லாம் தவிடுபொடியாக்கிவிடும். இதைத்தவிர சாம்சங் நிறுவனம் மட்டுமே 200MP Ultra High Resolution வைத்துள்ளது. ஆனாலும் இந்த High End CIS இன்னும் Sony நிறுவனத்தின் வசமே உள்ளது.

ஏற்கனவே Oppo Find X5 Pro உலகின் முன்னணி கேமரா போன்களில் ஒன்றாக உள்ளது. இதை விட மேம்பட்ட மாடலாக வெளியாகவுள்ள இந்த FInd X6 Pro மாடல் 2023 ஆம் ஆண்டின் சிறந்த போன்களில் ஒன்றாக இருக்கும்.

இந்த Oppo Find X5 Pro மற்ற விஷயங்களில் சிறந்த போனாக இருந்தாலும் Zoom கேமரா வசதியில் அதன் போட்டியாளர்களாக உள்ள Samsung S22 Ultra, Huawei P50 Pro மற்றும் Xiaomi Mi 11 Ultra ஆகிய போன்களை விட குறைந்த திறன் கொண்டுள்ளது.

Oppo Find X6 Pro  Camera

ஆனால் புதிதாக வெளியாகவுள்ள Oppo Find X6 Pro மாடலில் இடம்பெறவுள்ள 50MP கேமரா இந்த குறையை தீர்த்துவிடும் என்றே நம்பப்படுகிறது. இதை தவிர இதில் ஒரு 32MP டெலிபோட்டோ கேமரா இடம்பெறும்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் புதிய சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களேயே தேர்வு செய்தாலும் இதுபோன்ற பெரிய கேமரா வசதிகள் கொண்ட சீன நிறுவனங்களின் போன்கள் மக்கள் கவனத்தை திருப்பும்.


விரைவில் வெளியாகவுள்ள Samsung S23 மாடலில் 200MP கேமரா வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் Oppoஒப்போ நிறுவனம் சிறந்த டிசைன் மற்றும் வசதிகளை வழங்கியாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மேலும் என்ன புதிய வசதிகள் உள்ளன, அதன் விலை, திறன் போன்ற அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனை ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்களை நோக்கி செல்லும் வாடிகையளர்களை திசை திருப்பவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த போன் அடுத்த ஆண்டின் சிறந்த போன்களில் ஒன்றாக இருக்கும்.

Share

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *