Nokia: வெறும் 4 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியாவின் தரமான 4G போன்

Nokia: வெறும் 4 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியாவின் தரமான 4G போன்

 

Nokia 8210 4G Launch: ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம், ஆனது தனது நோக்கியா 8210 4ஜி கீபாட் போனை ரூ.4 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 3.8 இன்ச் QVGA டிஸ்ப்ளே, டூயல் சிம் சப்போர்ட் உள்ளது.

ஹைலைட்ஸ்:

  • நோக்கியா 8210 4ஜி கீபாட் போன் அறிமுகம்
  • இதன் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
  • இந்த போனில் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது

Nokia 8210 4G India Launch: நோக்கியா இறுதியாக அதன் புதிய பட்ஜெட் 4ஜி போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கீபாட் போனான நோக்கியா 8210 4G பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தது. ஆனால், இந்திய வெளியீட்டுக்காக நோக்கியா பிரியர்கள் இதுவரை வெயிட் பன்னிருக்காங்க

நோக்கியாவோட இந்த தரமான கீபேட் 4ஜி போன் இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இரட்டை சிம் ஆதரவு உள்ளது. இது சீரிஸ் 30+ இயங்குதளம் வாயிலாக வேலை செய்கிறது. இதில் 3.8 இன்ச் QVGA டிஸ்ப்ளே உள்ளது.

புதிய நோக்கியா 4G போனில் ப்ளூடூத் 5.0, நிறுவனத்தின் பிரபலமான ஸ்னேக் விளையாட்டு ஆகியவற்றுடன் வருகிறது. இந்த போனை குறித்த மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.


Nokia 8210 4G Price in India – நோக்கியா 8210 4ஜி இன் விலை இதோ
HMD Global நிறுவனம் நோக்கியா 8210 4ஜி கீபாட் போனை ரூ.3,999 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசி டார்க் நீலம், சிவப்பு நிறத்தில் வருகிறது. புதிய நோக்கியா போனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் இந்தியா ஆகியவற்றில் இருந்தும், பிற ரீடைல் விற்பனை கடைகளில் இருந்தும் வாங்கலாம். நோக்கியா கீபாட் போன் நிறுவனத்தின் ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகிறது.

Nokia 8210 4G Features – நோக்கியா 8210 4ஜி அம்சங்கள்

nokia 8210 price in india.

நோக்கியா 8210 4ஜி கீபாட் போன் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது. இதில் 3.8 அங்குல QVGA டிஸ்ப்ளே உள்ளது. போனில் 128MB ரேம், 48MB ஸ்டோரேஜ் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஃபோனின் சேமிப்பகத்தை 32ஜிபி வரை எக்ஸ்பேண்ட் பன்ன முடியும்.

இந்த 4ஜி போன் யுனிசோக் டி107 (Unisoc T107) சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதில் சீரிஸ் 30+ (Series 30+) இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. நோக்கியா ஃபீச்சர் போனில் 0.3 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. Nokia 8210 4G பவர் பேக்கப்பிற்காக சக்திவாய்ந்த 1450mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஒருதடவை சார்ஜ் செய்தால் 27 நாள்கள் வரை தாங்கும் ஸ்டாண்ட்-பை நேரத்தை இந்த போன் வழங்குகிறது. எஃப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 3.5மிமீ ஹெட்போன் ஜாக், சார்ஜ் செய்ய மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளும் இதில் இருக்கிறது.

இதனுடன், ஸ்னேக், டெட்ரிஸ், பிளாக் ஜாக் போன்ற விளையாட்டுக்கள் எல்இடி பிளாஷ் லைட்டும் உள்ளது. இந்த போனின் எடை மொத்தம் 107 கிராம் எடை . கைக்கு அடக்கமான, அதிக நேரம் பேட்டரி தாங்கும் போனை பயனர்கள் வாங்க நினைத்தால், Nokia 8210 4G நல்ல ஆப்ஸனாக இது இருக்கும்.

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.