வருகிற 75வது சுதந்திர தின விழாவையொட்டி, ஜியோ JIOநிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளது. முக்கியமாக, நிறைய டேட்டா பிளான்களில் கூடுதல் ஆஃபர் வெளியிட்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.

ஹைலைட்ஸ்:

  • ரிலையன்ஸ் JIO ஜியோவின் சுதந்திர தின சலுகை
  • 750ரூ மதிப்பில் எக்ஸ்ட்ரா டேட்டா
  • 2250ரூ மதிப்பில் எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள்

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்களை அறிவித்துள்ளது . அதில் 2999 ப்ரீப்பெய்டு ப்ளான் ஒன்றும்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 750 ரூபாய் மதிப்பில் எக்ஸ்ட்ரா டேட்டா மற்றும் 2250‌ ரூபாய் மதிப்பில் எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்த ஆஃபர் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரங்களை இந்த கட்டுரையில் தெரிந்துக் கொண்டு உடனே உங்கள் ஆஃபருக்கு முந்துங்கள்.

  • வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் பல்வேறு வணிக நிறுவனங்களும் இதை கொண்டாடும் வகையில் தங்கள் ப்ராடெக்ட்டுகளுக்கு பற்பல ஆஃபர்களை அறிவித்துள்ளனர். அதேபோல் நெட்வொர்க் துறையில் முண்ணணியில் இருக்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவும் ஆஃபர் ஒன்றை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது‌.

அந்த ஆஃபரின் படி 2999 ரூபாய்க்கு ப்ரீப்பெய்டு ரீச்சார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு தினசரி 64 Kbps ஸ்பீடில் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் ஒரு நாளுக்கு 100 மெசேஜ் அனுப்பும் வசதியும் கிடைக்கும். இதோடு சேர்த்து JioTV, JioCinema, JioSecurity, JioCloud, and Disney+ Hotstar Mobile ஆகியவற்றின் ஒரு வருட சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக கிடைக்கும். அதே போல் 2022 சுதந்திர தின சிறப்பு‌ சலுகையாக 750ரூபாய் மதிப்புள்ள 75GB டேட்டா இலவசமாக தருகிறது ஜியோ.

மேலும் 2250 ரூபாய் மதிப்புள்ள கூடுதல் ஆஃபர்களையும் இணைத்துள்ளது. இந்த ப்ளோனோடு Ajio (Rs 750 off), Netmeds (Rs 750 off) and Ixigo (Rs 750 off) ஆகிய ஆஃபர்களும் சேர்த்து வழங்குகிறது ஜியோ. இந்த ஆஃபர்களுக்கு கடைசி தேதி என்றும்‌ ஜியோ எதையும் அறிவிக்காததால் உடனே முடிவதற்குள் முந்திக் கொள்ளுங்கள்.

Share

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *