அழகை பாதுகாக்கும் கிச்சன் பொருள்கள், எதற்கு, எதை, எப்படி பயன்படுத்தணும்?

beauty நீங்கள் இயற்கையாகவே உங்களை அழகாக்கி beauty கொள்ள விரும்பினால் சமையலறையில் இருக்கும் இந்த பொருள்கள் உங்களுக்கு உதவும்.உங்கள் சருமத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நீங்கள் என்னென்ன பயன்பட்டுத்தலம் என்பதை இங்கு பார்க்கலாம்.

அழகை பாதுகாக்கும் கிச்சன் பொருள்கள், எதற்கு, எதை, எப்படி பயன்படுத்தணும்?

ஹைலைட்ஸ்:

  • மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் சருமத்தில் சிவத்தல் மற்றும் எரிச்சலை குறைக்க உதவுகிறது.
  • தேநீரில் எரிச்சல் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வீங்கிய கண்களை போக்க செய்யும்.

சருமத்துக்கு சிறந்த மாஸ்க் – அவகேடோ

இன்று மருத்துவ குணங்களுக்காக பழங்களை அதிகம் எடுத்துகொள்கிறோம். அப்படியான பழங்களின் பட்டியலில் அவகேடோவும் உள்ளது. இந்த அவகேடோ சருமத்துக்கு சிறந்த மாய்சுரைசிங் ஆக இருக்கும். இதை வறண்ட சருமத்துக்கும் சருமம் நீரேற்றமாக இருக்கவும் பயன்படுத்தலாம்.

இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தில் சிவத்தல் மற்றும் எரிச்சலை குறைக்க உதவுகிறது.
இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு அவகேடோ பழத்தை மசித்து அதை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் மென்மையாக தடவி விடவும். மிருதுவானbeauty சருமம் பெறுவதற்கு 2 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.

இறந்த சரும செல்களை வெளியேற்ற – சர்க்கரை

சர்க்கரை இல்லாத சமையலறை உண்டா என்ன? உங்கள் சருமத்தின் இறந்த சரும செல்களை அகற்ற கடையில் விலை உயர்ந்த முக ஸ்க்ரப்கள் வாங்க வேண்டியதில்லை. கிச்சன் கேபினட்டில் இருக்கும் சர்க்கரை உடன் அரிசிமாவு கலந்து சருமத்துக்கு சிறந்த எக்ஸ்ஃபொலியண்ட்களை உருவாக்கலாம்.

இறந்த சரும செல்களை வெளியேற்ற - சர்க்கரை

சர்க்கரை இயற்கையான ஈரப்பதமுட்டும் பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தை இயற்கையாக ஈரப்பதமாக நீரேற்றமாக வைத்திருக்கும். சர்க்கரையை வெறும் தேங்காயெண்ணெயுடன் கலந்து முகத்தில் மென்மையாக தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கலந்து விடவும். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறும்.

கண்களுக்கான பராமரிப்பு

பகல் நேரங்களை தாண்டி இரவு நேரங்களிலும் கம்ப்யூட்டர், செல்ஃபோன், லேப் டாப் என்று பயன்படுத்துபவர்கள் கண்களையும் கவனிக்க வேண்டும். கண்கள் வீங்கி இருந்தால் நீங்கள் க்ரீன் டீ பேக் தவிர வேறு எதையும் வைக்க வேண்டும். தேநீரில் எரிச்சல் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வீங்கிய கண்களை போக்க செய்யும்.

இரண்டு டீ பேக் எடுத்து வெந்நீரில் மூன்று நிமிடங்கள் மேல் ஊறவைத்து பிறகு ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குளிர வைக்கவும். இதை ஒவ்வொரு கண்ணிலும் ஒரு டீ பேக் வைத்து 10 நிமிடங்கள் வரை வைத்துகொள்ளவும். கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.

இயற்கை டோனர்

வீட்டில் தயாரிக்கப்பட்ட முக டோனர் சருமத்துக்கு பாதிப்பில்லாதது. ஆப்பிள் சீடர் வினிகர் சிறந்ததாக இருக்கும். இது சருமத்துக்கு நன்மை செய்வதோடு முகப்பருவை வெளியேற்றவும் செய்யும். இதில் இருக்கும் அமிலத்தன்மை பருக்களை விரைவில் உலர்த்துகிறது. ஒரு பகுதி ஆப்பிள் சீடர் வினிகர் நான்கு பங்கு தண்ணீரில் கலக்கவும். இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த டோனரை பஞ்சில் நனைத்து சருமத்தில் மேலாக பயன்படுத்தவும். முகப்பரு இருக்கும் இடத்திலும் நன்றாக தடவி விடவும். நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு

ஆப்பிள் சீடர் வினிகரை நேரடியாக பயன்படுத்தகூடாது. ஒரு பகுதிக்கு மூன்று பங்கு தண்ணீர் பயன்படுத்த வேண்டும்.

தளர்வான முடிக்கு

ஆலிவ் எண்ணெய். இது முடிகளை உயிர்ப்பாக வைத்திருக்கும். ஆலிவ் எண்ணெய் கொழுப்பு அமிலங்களால் ஆனது. ஒவ்வொரு முடி இழைகளுக்கும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

தளர்வான முடிக்கு -  ஆலிவ் எண்ணெய்.

அரை கப் ஆலிவ் எண்ணெய் உங்கள் கூந்தல் தன்மைக்கேற்ப சூடாக்கவும். இது இளஞ்சூடாக இருக்கட்டும். இதை சருமம் மற்றும் கூந்தல் முழுவதும் மசாஜ் செய்து விடவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். மென்மையான மற்றும் பளபளப்பான முடியை பெறலாம்.

எலுமிச்சை சாறு

முந்தைய காலங்களில் எலுமிச்சை சாறு இயற்கையாகவே முடியை ஒளிர செய்ய பயன்படுத்தப்பட்டது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது முடி வெட்டுக்களை திறக்கும். சூரியனின் புற ஊதாக்கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பை இது அளிக்கும்.

எலுமிச்சை பழங்களின் சாற்றை பிழிந்து மூன்றில் ஒரு கப் தண்ணீர் கலக்கவும். இந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலைமுடி முழுவதும் தடவி விடவும். குறைந்தது 45 நிமிடங்களாவது சூரிய ஒளியில் இருக்கவும். அப்போது முகம், கைகளில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்.

பிறகு கூந்தலை அலசி மைல்டான ஷாம்பு கொண்டு அலசி கண்டிஷனரை பயன்படுத்தினால் கூந்தல் இலகுவாக மாறும்.

Share

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *