சீரகத்தண்ணீர்

தினமும் ஒரு டம்ளர் சீரகத்தண்ணீர் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்? தெரிஞ்சுக்கிட்டா தவிர்க்கமாட்டீங்க

சீரகம். இந்தியாவில் முக்கியமான மசாலாக்களில் அதுவும் ஒன்று. சமையலறையில் எப்போதும் இருக்கும் இது உணவுக்கு சுவையை தாண்டி வேறு என்ன நன்மைகளை அளிக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்:

  • சீரகம் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.
  • சீரகத்தண்ணீர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
  • சீரகத்தண்ணீர் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது.
  • உணவுகளுக்கு சிறந்த சுவையை தரக்கூடிய சீரகத்தை இரவில் ஊறவைத்து குடிப்பது நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • சீரகத்தண்ணீர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்கள் காரனமாக இது உடலுக்கு நல்லது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரு டம்ளர் சீரகத்தண்ணீர் குடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு அதிசயங்களை செய்யலாம். அப்படி அளிக்க கூடிய நன்மைகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

சீரகம் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி- ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளது மேலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட செய்கிறது. இதில் மெக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்றவை உடலில் தொற்றுநோய்களை தடுக்க உதவியாக இருக்கும்.

செரிமானம் மற்றும்  வளர்சிதை மாற்றம்

அழற்சி எதிர்ப்பு விளைவு

சீரகத்தண்ணீரில் தைமோகுவினோன் என்ற சக்திவாய்ந்த இராசயன கலவை உள்ளது. இது கல்லீரலை அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சீரக நீரின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள், வயிற்று கோளாறு போன்ற பிற நிலைகள் தொடர்பான வலியை குறைக்கவும் உதவுகிறது. இதன் ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் பிடிப்பை குறைக்க உதவும். மாதவிடாய் காலத்தில் சீரகத்தண்ணீர் மிகவும் பலனளிக்கும்.

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம்

சீரகத்தண்ணீர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. சீரகத்தண்ணீர் வயிற்று கோளாறுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பை உடைக்கும் என்சைம்கள் போன்ற சேர்மங்களை சுரக்க உதவுகிறது. இது கல்லீரலில் பித்த அமிலங்களின் உற்பத்தி செயல்முறையை துரிதப்படுத்துகிறது. கொழுப்புகளின் செரிமானத்துக்கு உதவுகிறது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது அஜீரணம், வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

பெண்கள்  சீரகத்தண்ணீர்

மாதவிடாய் காலங்களை ஒழுங்குப்படுத்துகிறது

பெண்கள் சீரகத்தண்ணீர் எடுக்கும் போது ஒழுங்கற்ற சுழற்சிகளை கடந்து செல்கிறார்கள். சீரகத்தண்ணீர் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்தும். இது கருப்பை சுருங்குவதற்கு காரணமாகிறது. இது கருப்பையில் தேங்கியிருக்கும் இரத்தத்தை வெளியிடுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் பெண்களுக்கு சீரகத்தண்ணீர் ஆரோக்கியமாக பானம் ஆகும். இது பால் சுரப்பை ஊக்குவிக்கிறது. குழந்தைக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.

ஆரோக்கியமான சருமம்

சீரகத்தண்ணீரில் கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தின் புத்துணர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் தெளிவான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை பெற உதவுகின்றன. ஏராளமான வைட்டமின் ஈ உள்ளது. இதனால் முன்கூட்டிய வயதை தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. தினமும் ஒரு டம்ளர் சீரகத்தண்ணீர் சருமத்தில் தோன்றும் சுருக்கங்களை மெதுவாக்கலாம்.

முகப்பருவை நீக்குகிறது

சீரகத்தண்ணீரில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகின்றன. முகப்பருவை அழிக்க உதவுகின்றன. உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது நச்சுக்கள் நமது உடலில் நுழைந்து நமது சருமத்தின் புரதத்தை உடைக்கிறது. இது கறைகள் மற்றும் தளர்வான சருமத்தை ஏற்படுத்துகிறது.
சீரகம் உடலில் இருக்கும் நச்சுக்களை எளிதாக நீக்குகிறது.

நீரிழிவு-  இரத்த சர்க்கரை அளவு

முடி ஆரோக்கியமாக வைக்கிறது

சீரகத்தண்ணீர் பல பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உச்சந்தலை ஆரோக்கியத்தையும் பெரிதும் மேம்படுத்தும். இதில் புரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடியின் வேர்க்கால்களில் இருந்து நிரப்புகிறது. இது முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது. தலைமுடிக்கு இதை பயன்படுத்துவதால் இது முடி உதிர்வதை குறைத்து மென்மையாக மாற்றுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சீரகம் இதயத்தில் மிகவும் நேர்மறையான விளைவை கொண்டுள்ளது. இது இயற்கையான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டுள்ளன. இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் உதவியாக உள்ளது. சீரகத்தன்ணீர் குடிப்பது இதய தசைகளை வலுப்படுத்த செய்கிறது. கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதனால் இதய அடைப்பு, மாரடைப்பு மற்றும் இரத்த உறைவு போன்ற இதய கோளாறுகளை கணிசமாக குறைக்கிறது.

நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவு

சீரகத்தண்ணீர் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது. நீரிழிவு நோய் கொண்டுள்ளவர்கள் சீரகத்தண்ணீர் குடித்துவந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது கிளைகோசைலேட் ஹீமோகுளோபின் அளவை குறைக்கிறது. உணவுக்கு பிறகு 30 நிமிடங்களுக்கு பிறகு இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்த சோகை சிகிச்சையளிக்கிறது

சீரகத்தண்ணீர் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக தேவையான முக்கியமான சத்து. இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல அவசியமானது. உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறைவது சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல் போன்ற இரத்த சோகையின் பல அறிகுறிகளை உண்டாக்கும். சீரகத்தண்ணீர் தொடர்ந்து குடிப்பதன் மூலம் இந்த அறிகுறிகள் குறையலாம்.

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.