வழுக்கை:
வழுக்கை விழுந்தால் வாழ்க்கையே விழுந்தது போல் பல ஆண்களும் கவலைபடுகிறார்கள். என்ன விலை கொடுத்தாலும் இழந்த முடியையும் வழுக்கையையும் மீண்டும் பெற முடியாது.
வழுக்கை பரம்பரையாக வருவதால் ஒன்றுமே செய்யமுடியாது என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் கவனமெடுத்தால் வழுக்கையை வராமலோ அல்லது நீண்ட நாட்கள் தள்ளிபோடவோ செய்ய முடியும். இன்று இளைஞர்கள் வழுக்கை பிரச்சனையால் அவதிப்பட காரணம் மோசமான உணவு பழக்கமும், சரியான பாரமரிப்பின்மையும் தான்.
வழுக்கை வந்த பிறகு சிகிச்சையும் பராமரிப்பையும் மேற்கொள்வதை காட்டிலும் அன்றாட உணவில் உங்கள் தட்டில் இருக்க கூடிய பொருள் என்ன என்பதை கவனியுங்கள். ஏனெனில் கூந்தல் இழப்புக்கான காரணங்களில் உணவு முக்கிய இடம் பிடிக்கிறது. வழுக்கையை தள்ளிபோட விரும்பினால் நீங்கள் அன்றாட உணவில் இதையும் சேர்க்க வேண்டும். இது வழுக்கையை தடுக்க செய்யாது. ஆனால் வழுக்கை விழுவதை தள்ளிபோட செய்யலாம்.
பால் மற்றும் பால் பொருள்கள்

பால், தயிர், சீஸ் மற்றும் பிற பால் பொருள்கள் வழுக்கை பாதிப்பு கொண்டவர்களுக்கு சிறப்பாக உதவும். வைட்டமின் பி 7 என்று சொல்லக்கூடிய பயோட்டின் பால் மற்றும் பால் பொருள்களில் நிறைவாக உள்ளது. அதே போன்று முட்டையிலும் இவை உள்ளது.
பயோட்டின் முடி இழப்பை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் இதில் இருக்கும் சத்துகள் வைட்டமின் பி 12, புரதங்கள், இரும்பு, துத்தநாகம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் வழங்குகிறது.
ஓட்ஸ்

உடல் எடை குறைப்புக்கு பெரும்பாலும் பலரும் காலை உணவாக பயன்படுத்தும் இந்த ஓட்ஸ் உங்கள் வழுக்கை தலைக்கு தீர்வாக இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும். ஏனெனில் இது வழுக்கைக்கு எதிராக போராடுவதற்கான ஆயுதம் என்று சொல்லலாம்.
ஓட்ஸ் நார்ச்சத்து, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டெட் கொழுப்பு அமிலங்கள் கொண்டவை. ஓட்ஸில் வைட்டமின் பி நிறைவாக உள்ளது. ஓட்ஸில் இருக்கும் பீட்டா குளுக்கன் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது.
பாதாம்

பாதாம் தன்னுள் பயோட்டின் மற்றும் மெக்னீசியம் உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான கூந்தலை வளர்ப்பதற்கு அவசியமான சத்து. பாதாமை தவறாமல் எடுத்துகொள்வதன் மூலம் முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதோடு வளர்ச்சியும் சீராக இருக்கும்.
தினசரி இரவு பாதாம் 4 ஊறவைத்து மறுநாள் காலை தோல் உரித்து மென்று சாப்பிட வேண்டும். பாதாமை பொடித்து பாதாம் பாலாகவும் குடிக்க செய்யலாம். தினசரி உங்கள் உணவில் பாதாம் இருக்கட்டும்.
அக்ரூட் பருப்புகள்
பாதாமை காட்டிலும் சற்றே விலை உயர்ந்தது. ஆனால் சத்தும் நிறைந்தது. ஒரு வேளை உங்கள் முடி இழப்பு அதிகமாகி வழுக்கையை சந்தித்தால் நீங்கள் உணவில் அக்ரூட் பருப்புகளை சேர்ப்பது அவசியம்.
அக்ரூட் பருப்புகளில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளது. வைட்டமின் பி 7 பயோட்டின் சத்தும் உள்ளது. பயோட்டின் முடி உதிர்தலை தடுக்க உதவுகிறது அதோடு முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்கிறது.
மயிர்க்கால்கள் பலவீனமாகாமல் வலுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்தலோடு இருப்பவர்கள் தினசரி இதில் 2 அல்லது 3 கொட்டைகள் வரை எடுத்துகொள்வது நிச்சயம் பலன் அளிக்கும்.
கேரட்
முடி வழுக்கை விழாமல் இருக்க காய்கறிகளில் கேரட் எடுத்துகொள்வது அவசியம். இது கண்களுக்கு மட்டும் அல்ல, வைட்டமின் ஏ நிறைந்த கேரட் உச்சதலைக்கும் ஊட்டம் அளிக்கிறது. கூந்தலை வறட்சியிலிருந்து பாதுகாத்து கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கிறது. கூந்தலை வலுவாக்க செய்கிறது.
காய்கறிகள் தினம் ஒரு கப் உணவில் கட்டாயமாக்குங்கள். அதில் கேரட் முக்கியமான உணவாக இருக்கட்டும். கேரட் சாலட், கேரட் ஜூஸ், கேரட் தயிர் சேர்த்த சாலட் என்று மாற்றி எடுக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஆண்கள் இதை அதிகம் சேர்க்கலாம். இதில் சிலிக்கா தாதுக்கள் உள்ளது. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள எலாஜிக் அமிலமானது தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. முடி மெலிவை போக்கி அடர்த்தியாக வைத்திருக்க செய்கிறது.
ஆரோக்கியமான சீரான உணவு, மன அழுத்தம் இன்மை, தீவிர உணவு முறைகள், வேகமாக எடை இழப்பது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பராமரிக்க உதவும்.
The tips in this post is really helpful bcoz I’m slightly bald headed, by eating carrot, strawberry, oats,badam will help in reducing the baldness.
It was very useful information