prana

தமிழகத்தில் தயாராகும் ப்ராணா(prana electric bike) அசத்தலான எலெக்ரிக் பைக் அறிமுகம்..

PRANA ELECTRIC BIKE அறிமுகம்:

எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரூ.1.99 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கோயம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (எஸ்விஎம்) அதன் அதிவேக prana electric bike எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

வேரியண்ட்:

CLASS, GRAND மற்றும் ELITE என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் வருகிற மார்ச் மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று வேரியண்ட்களில் க்ராண்ட் மற்றும் எலைட் வேரியண்ட்கள் மட்டும்தான் தற்போதைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விலை:

இவற்றில் க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆப்பர்:

பிராணா பைக்கிற்கு எஸ்விஎம் நிறுவனம் ரூ.25,000 வரையில் தள்ளுபடி சலுகைகளையும் தற்சமயம் வழங்கி வருகிறது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர் 10 மரக்கன்றுகளை வெவ்வேறான பகுதிகளில் நட்டு அதனை தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாதத்தவணை/ EMI

மேலும் பிராணா எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.5,200 என்ற குறைந்த மாதத்தவணை திட்டத்தையும் எஸ்விஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. இது 3 வருட காலத்தை கொண்டுள்ளது.

மோட்டார் மற்றும் பேட்டரி:

prana electric bike அதிநுட்பமான ஏர்-கூல்டு பிஎல்டிசி எலக்ட்ரிக் மோட்டாரை 4.32 கிலோவாட்ஸ் மற்றும் 7.2 கிலோவாட்ஸ் லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் எஸ்விஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.

மைலேஜ்:

அதாவது வேரியண்ட்களை பொறுத்து பேட்டரி வழங்கப்படவுள்ளது. க்ராண்ட் வேரியண்ட் சிறிய பேட்டரி தொகுப்புடன் சிங்கிள்-சார்ஜில் 126கிமீ தூரம் வரையிலும்,

எலைட் வேரியண்ட்டின் பேட்டரி 225கிமீ தூரம் வரையிலும் பைக்கை இயக்கி செல்லும். இந்த பைக்கை அதிகப்பட்சமாக மணிக்கு 123கிமீ வேகத்தில் இயக்க முடியும்.

0-வில் இருந்து 60kmph வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடக்கூடக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கில் ப்ராக்டிஸ், ட்ரைவ், ஸ்போர்ட்ஸ் மற்றும் ரிவர்ஸ் என்ற நான்கு விதமான ட்ரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. ப்ராக்டிஸ் மோட் பிரத்யேகமாக புதியதாக பைக் ஓட்டுபவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இதில் 45kmph வேகத்திற்கு மேல் பைக்கை இயக்க முடியாது. ரிவர்ஸ் மோடில் அதிகப்பட்சமாக 5kmph வேகத்தில் பைக்கை பின்னோக்கி ஓட்ட முடியும்.

prana electric bike ல்சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் மொத்த எடை 165kmph ஆகும்.

ஷோரூம்கள்:

எஸ்விஎம், தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் சங்கத்தின் தனிப்பட்ட நிதியால் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் கோயம்புத்தூரில் மட்டுமே டீலர்ஷிப் ஷோரூமை கொண்டுள்ள இந்த நிறுவனம் விரைவில் சென்னை, மதுரை, திருப்பூர், திருச்சி, பாண்டிச்சேரி, திண்டுக்கல், பெங்களூர், கோழிக்கோடு என தென்னிந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் சந்தையை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது.

Share


copy the below code



copy the below code

One thought on “தமிழகத்தில் தயாராகும் ப்ராணா(prana electric bike) அசத்தலான எலெக்ரிக் பைக் அறிமுகம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *