சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தல தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தல தோனி..!

  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி

 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தல தோனி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், என்றும் தல தோனி என்று அழைக்கப்படும், மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு விடுத்துள்ளார்..

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்ட நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக தல தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. என் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்

சர்வதேச கிரிகெட் சாதனைகள்:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தல தோனி..!

இந்திய மக்கள் நீண்ட நாள் கனவான உலக கோப்பை வெற்றியை நீண்ட வருடங்களுக்கு பிறகு மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றது..

அதுமட்டுமில்லாமல் டி20 போன்ற எண்ணற்ற போட்டிகளில் தோனி தலைமையில், பல வெற்றிகளை இந்திய அணி வென்றுள்ளது,,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தல தோனி..!

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாக தல தோனி கேப்டனாக வலம் வருவதை பார்ப்பதற்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழகத்திற்கே ஒரு ஆரவாரம் இருக்கும்,

கிரிக்கெட்டை ரசிக்காதவர்கள் கூட மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை பார்த்த பின், கிரிக்கெட்டிற்க்கும், மகேந்திர சிங் தோனியையும் பிடித்துவிடும்,,

வெற்றியும் தோல்வியும் எதிர்கொள்ளும் விதம்:

வெற்றியையும் தோல்வியையும், சாதாரணமாக பார்க்கும் தன்மையும், ஒரு அணியின் தலைவனாக வழிநடத்தும் விதமும் தோனியிடம், அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும்,,

கடைசி வரை போராடி வெற்றி:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தல தோனி..!

மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை ஆஃப் செய்துவிட்டு செல்லும் காலம் சென்று,
ஆட்டத்தின் கடைசி வரை நின்று வென்று விடுவார் என்ற நம்பிக்கையை வரவழைத்து கடைசி வரை ஆட்டத்தை பார்க்க வைத்து வெற்றியின் சந்தோஷத்தை கிரிக்கெட் ரசிகர்களுக்கு தந்தவர் தல தோனி,,

தல தோனியின் இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு என்ற செய்தி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே ஒரு கஷ்டமான செய்திதான்,

ஓய்விற்க்கு முன் விளையாடிய போட்டி:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தல தோனி..!
 கடைசியாக ரன் அவுட் ஆகும் அந்த காட்சி இந்திய கிரிகெட் ரசிகர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
 

தல தோனி கடைசியாக ஆடிய போட்டி கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட்டில் செமி பைனலில் கடைசிவரை போராடி நியூஸிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த போட்டியாகும்,

அதன் பிறகு கொரோனா பிரச்சினை காரணமாக நடக்கவிருந்த அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் இந்தப் போட்டியும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன இருந்தாலும் வரவிருக்கும்  ஐபிஎல் போட்டியில் தல தோனியின் அனல்பறக்கும் ஆட்டம் சூடு பிடிக்கும் என்பதை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் சந்தோசத்திற்க்கும் விருந்தாக அமையும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

இரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப்படுகிறீர்களா? இந்த பதிவை அப்படியே கொஞ்சம் படிச்சிட்டு தூங்க போங்க..

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *