புஷ் அப்

தினமும் புஷ் அப் செய்தால் இவ்வளவு நன்மை இருக்குதாம்…!

புஷ் அப் செய்வதால் என்னென்ன நன்மைகள் என படிச்சி பாருங்களேன்..

புஷ் அப் என்பது உங்க முழு உடலையும் தசைகளையும் ஈடுபடுத்தும் ஒரு எளிய பயிற்சி ஆகும். இந்த புஷ்அப் பயிற்ச்சி ஆனது நீங்கள் எந்த உபகரணும் இல்லாமல் செய்ய முடியும். நம்முடைய கைகளையும் கால்களையும் வைத்தே இதை எளிதாக செய்ய முடியும்.

நான்காம் நூற்றாண்டிலே புஷ் அப் இருந்ததாக கூறப்படுகிறது. 1900 களின் முற்பகுதியில் நவீன புஷ் அப்பை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்திய பலமான ஜெரிக் ரெவில்லாவிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது புஷ் அப் ஒரு அடிப்படை உடற்பயிற்சி ஆக இருக்கிறது. உதாரணமாக ராணுவத்தில் இருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 50 புஷ்ப்களைச் செய்ய வேண்டும். ஜிம்மிற்க்கு சென்றால் கூட முதலில் தரப்படும் பயிற்ச்சி புஷ் அப் தான். எனவே புஷ்அப் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

​புஷ்-அப்

நீங்கள் ஒவ்வொரு நாளும் புஷ்அப் செய்வது மன அழுத்தத்தை குறைக்கும் புஷ்அப் உங்க பெக்டோரல் தசைகள் மற்றும் ட்ரைசெப்ஸில் வலிமை மற்றும் அழகான தோற்றத்தை உருவாக்குவதற்கு சிறந்தவை மட்டுமல்ல. அவை உடனடியாக உங்கள மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு அருமையான வழியாகும் என்று உடற்பயிற்சி நிபுணர் கூறுகிறார்.

புஷ்அப் என்பது ஒட்டுமொத்த உடலுக்கான உடற்பயிற்சியாகும். இது உங்கள் தசைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்த உதவுகிறது. இதயத் துடிப்பு அதிகரித்து உடலில் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கிறது.

ஆக்ஸிஜன் அளவு அதிகரித்த உடன் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆன எண்டோர்பின்களை உருவாக்குகிறது. எண்டோர்பின்கள் உங்க மூளையில் உள்ள ரசாயனங்கள் ஆகும். இவை மனநிலை உயர்த்தியாக செயல்படுகிறது. மிதமான அளவு உடற்பயிற்சி உடலின் மன அழுத்த ஹார்மோன்களான அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஆகியவற்றைக் குறைக்கிறது.

அதிகமாக வேலை செய்வது உங்க உடலில் அதிக மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடும்.

​புஷ்அப் செய்வது கவனம் செலுத்த உதவுகிறது

புஷ்அப் செய்வது உங்க மன அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது. கவனச்சிதறல் மற்றும் கவனம் செலுத்துவதில் சிக்கல் போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது. குறைவான மன அழுத்தத்தில் இருக்கும் போது நம் கவனமும் மேலும் மேம்படுகிறது.

புஷ்அப்களைச் செய்வது நல்ல உணர்வுக்கான இரசாயனங்கள் (எண்டோர்பின்கள்) வெளியிடுவதன் மூலமும், நம் உடல்கள் வழியாகச் செல்லும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் மன அழுத்தத்தைக் நன்றாக குறைக்க உதவும்.

கடுமையான உடற்பயிற்சியின் மூலம் இதயம் பம்ப் செய்யப்பட்டு ஆக்ஸிஜன் எல்லா இடங்களுக்கும் செல்கிறது. இதனால் நீங்கள் அதிக கவனத்துடன் செயல்பட தொடங்குவீர்கள். நாள் முழுவதும் சுறுசுறுபாகவும் இருப்பீர்கள்

​புஷ்அப் செய்வது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த

புஷ்அப் செய்வது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது நாம் வயதாகும் போது பலனளிக்கக் கூடியது. நம் உடல்கள் காலப்போக்கில் தசைகளை மற்றும் ஆரோக்கியத்தை இழக்க தொடங்குகின்றன.

இது மருத்துவ ரீதியாக சார்கோபீனியா என்று அழைக்கப்படுகிறது. ஹார்வர்ட் ஹெல்த் படி, பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்நாளில் தசை வளர்ச்சியில் 30 சதவீதத்தை இழப்பார்கள்.எனவே இந்த தசை வளர்ச்சியில் இழப்பு நம் வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கிறது.

மந்தமான வளர்சிதை மாற்றம் உடல் கொழுப்பை அதிகரிக்க பெரும் பங்களிக்கிறது. இதுவே நீங்கள் புஷ்அப் செய்யும் போது தசைகள் வலிமையாகி உங்க வளர்ச்சிதை மாற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

​தோள்பட்டைகள் வலிமை

நீங்கள் ஒவ்வொரு நாளும் புஷ்அப் செய்யும் போது உங்கள் உடலை பலப்படுத்துகிறீர்கள்

புஷ்அப் செய்யும் போது உங்க கைகள், தோள்கள், மார்பு மற்றும் பின்புறம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் புஷ்அப் உங்களுக்கு வலிமையை அளிக்கிறது. இந்த புஷ்அப்களை முறையான பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது நல்லது.

ஒரு வலுவான, நிலையான இணைப்பை உருவாக்க, குறுக்குவெட்டு அடிவயிற்று உட்பட மையத்தின் அனைத்து தசைகளையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு நாளும் புஷ்அப் செய்வது அதிக புஷ்அப் செய்ய உதவும். ஒவ்வொரு நாளும் புஷப் செய்வது உங்கள் மார்பு, ட்ரைசெப்ஸ், முன்புற தோள்கள் மற்றும் மையத்தின் வலிமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று மகப்பேறியல் மகப்பேறு மருத்துவர் கூறுகிறார்.

ஒரு ஆய்வில் 92 பேர் கலந்து கொண்டு புஷ் அப் விளைவுகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர்களின் புஷ் அப் திறன் நிமிடத்திற்கு 34 என்ற நிமிடத்திலிருந்து நிமிடத்திற்கு 53 ஆக மேம்பட்டது.

​புஷ் அப் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்

நீங்கள் ஒவ்வொரு நாளும் புஷ் அப் செய்வது உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். தினசரி சுற்று புஷ்அப்கள் ஒருவரின் தன்னம்பிக்கைக்கு ஆச்சரியமான விஷயங்களைச் செய்ய முடியும் என்று தலைமை குத்துச்சண்டை மற்றும் தனிப்பட்ட பயிற்சியாளர் தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்வது நல்ல பழக்கவழக்கங்களையும் வழக்கத்தையும் உருவாக்குகிறது. புஷ் அப் பழக்கம் வலுவான சுயமரியாதையையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது.

ஒர்க்அவுட் செய்வது சுயமரியாதைக்கு சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது 2017 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​உடல் தோரணையை அழகை மேம்படுத்த உதவும்

புஷ் அப் பயிற்சி உங்க தோரணையை சரி செய்யவும், தோள்பட்டை, இடுப்பை வலுப்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது.

புஷ்அப்களும் நல்ல தோரணையை மற்றும் உடல் அழகை மேம்படுத்துகின்றன என்று அனைத்து பயிற்சியாளரும் தெரிவிக்கின்றன. ஏனெனில் அவை வலுவான மையத்தை உருவாக்குகின்றன.

ஒரு 2017 ஆய்வில், புஷ்அப்கள் நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது என்கிறது. ஹெல்த்லைன் ஆய்வின் படி, நல்ல தோரணை குறைவான தலைவலி, சிறந்த செரிமானம் மற்றும் அதிகரித்த ஆற்றல் உடல் வலிமை இவற்றை புஷ்அப்கள் தருகின்றன.

​புஷ் அப் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்

அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஜர்னலில் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஆய்வில் புஷ் அப் திறன் மற்றும் இருதய ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைக் கண்டறிந்தது.

குறிப்பாக, 40 க்கும் மேற்பட்ட புஷ்ப்களை முடிக்க முடிந்த சுறுசுறுப்பான, நடுத்தர வயது ஆண்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் இருதய நோய்க்கான ஆபத்து கணிசமாகக் குறைகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பல புஷ்அப்களை இயக்கும் திறன் பொதுவாக பயன்படுத்தப்படும் டிரெட்மில் சோதனைகளை விட இருதய நோய் அபாயத்தின் விளைவை பல மடங்கு குறைக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

​புஷ் அப் செய்வது தசைகளுக்குபாதுகாப்பானது

ஒவ்வொரு ஆண்டும் 65 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்க பெரியவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த காயத்தால் அவர்கள் மரணிக்கவும் செய்கின்றனர்.

ஆனால் புஷ் அப் செய்யும் போது இது போன்ற வீழ்ச்சி குறைக்கப்படுகிறது. காரணம் புஷ்அப்கள் சிறந்த தசை நினைவகத்தை கற்பிக்கக்கூடும், எனவே உங்கள் மேல் உடல் வலுவாக இருப்பது மட்டுமல்லாமல், நீங்கள் தடுமாறினால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரைவாக செயல்பட முடியும்.

தினசரி புஷ் அப் பயிற்சி மணிகட்டை மற்றும் கைகள் உட்பட மேல் உடலை வலுப்படுத்துகிறது, இதனால் எலும்புகளை உடைக்காமல் அல்லது மோசமாக இல்லாமல் உங்கள் வீழ்ச்சியை உடைக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் புஷ் அப் செய்வது எலும்பு இழப்பைத் தடுக்கவும், உதவும்

​புஷ் அப் செய்வது (பேக் பெயின்) முதுகுவலியை போக்கும்

எல்லா பெரியவர்களில் எட்டு சதவிகிதம் பேர் தொடர்ச்சியான அல்லது நீண்டகால முதுகுவலியை அனுபவிக்கிறார்கள்,

இது அமெரிக்காவில் ஆறாவது மிகவும் பாதிக்கும் சுகாதார நிலையாகும். தினசரி புஷப் பயிற்சி குறைந்த முதுகுவலியைப் போக்க உதவும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

புஷ் அப்ஸ் போன்ற கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் விளைவாக உங்கள் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் எண்டோர்பின்கள் உடல் வலியை எளிதாக்குவதோடு மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

ஒவ்வொரு நாளும் முறையற்ற புஷ் அப் செய்வது குறைந்த அடி முதுகு வலியை ஏற்படுத்தும்

புஷ்அப்கள் கீழ் முதுகை வலுப்படுத்தலாம், பல நபர்களுக்கு முதுகுவலியை போக்க உதவியாக இருக்கும். ஆனால் இதை நீங்கள் முறையான வழிகளில் செய்ய வேண்டும்.

முறையற்ற புஷ் அப் பயிற்சி உங்களுக்கு கீழ் முதுகு வலியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை அந்த மாதிரியான பிரச்சினை இருந்தால் உடனே உடற்பயிற்சியாளரை சந்திக்க வேண்டியது அவசியம்

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.