வாட்ஸ் அப்

இனிமே ஒரே கிளிக்கில் வாட்ஸ் அப்பில் தேவையில்லாவற்றை டெலிட் செய்யலாம்…

வாட்ஸ் அப் மொத்தமாக டெலிட் செய்யும் வசதி:

வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆனது , ஒருவழியாக அதன் ஆப்பில் ஸ்டோரேஜினை நிர்வகிப்பதை எளிதாக்கியுள்ளது. அதாவது வாட்ஸ்ஆப் ஒரு புதிய அம்சத்தினை – bulk delete (மொத்தமாக டெலிட் செய்தல்) அம்சத்தை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சமானது, டாக்குமென்டஸ், லின்க்ஸ், டெக்ஸ்ட்கள், காண்டாக்ஸ், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள்,போட்டோஸ் மற்றும் ஒரு தனிப்பட்ட சாட்டின் வாய்ஸ் மெசேஜ்கள் அல்லது ஒரு க்ரூப் சாட்டை ஒரே கிளிக்கில் டெலிட் செய்ய உதவுகிறது.

இது வாட்ஸ்ஆப்பில் சிறிய அளவிலான “இடத்தை” விடுவிக்கவும், உங்கள் ஆயிரக்கணக்கான மெசேஜ்களை மற்றும் மீடியா பைல்களையும் நிர்வகிக்கவும் உதவும்.

இந்த புதிய ஸ்டோரேஜ் மேனேஜ்மண்ட் டூலை நீங்கள் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் மெனுவில் காணலாம். ஒருவேளை உங்களுக்கு அது கிடைக்கவில்லை என்றால், ஆப் இன் லேட்டஸ்ட் வெர்ஷனை Google Play Store அல்லது Apple App Store இலிருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம்.

இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சத்தினை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த எளிமையான வழிமுறைகள் இதோ கொடுக்கப்பட்டிள்ளது..

ஆண்ட்ராய்டில் போனில் மொத்த்மாக டெலிட் அம்சத்தினை பயன்படுத்துவது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் WhatsApp-ஐ ஓப்பன் செய்யவும்.

வலது பிற கார்னர் மேலே காணப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

பின்னர் Settings-ற்குள் நுழையவும்.

இப்போது ‘Data and storage usage’ என்பதை கிளிக் செய்து பின்னர் Storage usage-ற்குள் செல்லவும்.

பின்னர் பல்க் டெலிட் அம்சத்தினை பயன்படுத்த விரும்பும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட க்ரூப் சாட் அல்லது தனிப்பட்ட சாட்டை தேர்வு செய்யவும்.

கடைசியாக ‘Free up space’ என்பதை கிளிக் செய்து, ‘Delete items’ என்பதை கிளிக் செய்யவும், அவ்வளவுதான் க்ளோஸ்!

ஐபோனில் பல்க் ஆக டெலிட் அம்சத்தினை பயன்படுத்துவது எப்படி?

உங்கள் iOS சாதனத்தில் WhatsApp-ஐ திறக்கவும்.

பின்னர் Settings மெனுவிற்குள் செல்லவும்.

இப்போது scroll செய்து கீழ் நோக்கி செலவும், அங்கே ‘Storage Usage’ என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பின்னர் பல்க் டெலிட் அம்சத்தினை பயன்படுத்த விரும்பும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட க்ரூப் சாட் அல்லது தனிப்பட்ட சாட்டை தேர்வு செய்யவும்.

இப்போது கீழ் பகுதில் ‘Manage’ என்கிற விருப்பத்தினை நீங்கள் காண்பீர்கள்.

கடைசியாக ‘Clear’ என்பதாகி கிளிக் செய்யவும், அவ்வளவுதான்!

இருப்பினும், நீங்கள் டெலிட் செய்த மெசேஜ்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து அல்ல, வாட்ஸ்ஆப்பில் இருந்து மட்டுமே நீக்கப்படும் என்பதை இங்கே கவனிக்க வேண்டியது அவசியம். இந்த அம்சம் முழுக்க முழுக்க ஆப் இன் ஸ்டோரேஜை சுத்தம் செய்ய மட்டுமே உங்களுக்கு உதவும், போன் ஸ்டோரேஜை சுத்தம் செய்யஅல்ல!

Share


copy the below code

One thought on “இனிமே ஒரே கிளிக்கில் வாட்ஸ் அப்பில் தேவையில்லாவற்றை டெலிட் செய்யலாம்…

Leave a Reply

Your email address will not be published.