தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது…

ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்தது, அதன் எதிரொலியாக தொழிற்சாலைகள், போக்குவரத்து, சினிமா தியேட்டர்கள், மால்கள், போன்ற பொதுமக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டு மக்களின் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வரும் வண்ணம் ஊரடங்கு ஆனது விதிக்கப்பட்டிருந்தது,,

அதன் பிறகு ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டது,,

தளர்வுகள்:

இந்த நிலையில் எட்டாம் கட்டமான தளர்வுகளில் இப்போது செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பஸ்கள் இயக்கவும், மற்றும் மால்கள் திறக்கவும், மற்றும் பெரியகடைகளில் 100சதவீதம் தொழிலாளர்களுடன் வேலை செய்யவும், மற்றும் மெட்ரோ ரயில் சேவை, இ-பாஸ் ரத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவற்றில் இருந்து தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது,

மக்கள் மகிழ்ச்சி:

இத்தனை நாளாக போக்குவரத்திற்க்கு மிகவும் சிரமபட்டுகொண்டு இருந்த பொதுமக்கள் தற்ப்போது இ பாஸ் ரத்து மற்றும் பேருந்து சேவை, வழிபாட்டுதளங்கள் மீண்டும் திறப்பு போன்றவ வழக்கம் போல தொடங்குவதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

தனியார் பேருந்துகள் இயங்காது:

இந்நிலையில் அரசு அறிவித்துள்ள பேருந்து சேவை சென்னை புற நகரங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் மாவட்டஙளுக்குள் இயக்கலாம் என்ற அறிவிப்பின்படி தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்,

இதன் எதிரொலியாக செப்டம்பர் 1ஆம் தேதி முதல்தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமயாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

மாவட்டத்திற்ற்க்குள் பேருந்து இயக்கினால் லாபம் கிடைக்காது எனவும். இருக்கைகள் அனைத்தயும் பயன்படுத்த அனுமத்திக்க வேண்டும் எனவும் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…! ட்ரூ காலர் இல் இருந்து உங்களது மொபைல் எண்ணை அகற்றுவது என்பது உங்களுக்கு தெரியுமா…!

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *