புலாவ் சாதம்

15 நிமிடத்தில் ஈஸியாக புலாவ் சாதம் செய்வது எப்படி…?

புலவு சாதம் செய்வது எப்படி?

புலாவ் சாதம் என்பதுஅனைவருக்கும் பிடித்த ஒரு உணவு ஆகும்,இதில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதனால் நமது உடம்பிற்கு நிறைய ஊட்டச்சத்து இதன் மூலம் கிடைக்கிறது, மேலும் புலாவ் சாதம் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் கண்டிப்பாக இதை ஒரு முறையாவது நீங்கள் வீட்டில் வெயிட் பண்ணி பாருங்க,,

சரி, இந்த சுவையான புலாவ் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்…

புலாவ் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

 • 1 பாசுமதி அரிசி அரை கிலோ
 • எண்ணெய் 50 ml
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்
 • நெய் 50ml
 • பிரியாணி இலை சிறிதளவு
 • புளிக்காத தயிர் ஒரு கப்
 • வெங்காயம் 1
 • பட்டை சிறிய துண்டு
 • ஏலக்காய்-2
 • கிராம்பு-2
 • மிளகாய்-2
 • தக்காளி-1
 • கேரட் உருளைக்கிழங்கு பீன்ஸ் பச்சை பட்டாணி இவை அனைத்தும் சேர்ந்து கால் கிலோ
 • மல்லி புதினா சிறிதளவு
 • உப்பு தேவைக்கு ஏற்ப

புலாவ் சாதம் செய்முறை:

அரிசியை நன்றாகக் களைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்,

காய்கறிகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்,

ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக காய்ந்ததும், ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை இவற்றை சேர்த்து நன்றாகவதக்கவும், அடுத்து வெங்காயத்தை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி , மிளகாய் சிறிது மல்லி புதினா சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்,

தண்ணீர் சேர்க்காமல் நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து வதக்கவும் பிறகு மூடி போட்டு மூடிவிடவும்,

காய்கறிகளில் இருக்கும் தண்ணீருடன் சேர்ந்து நன்றாக காய்கறிகள் வெந்து விடும்,

காய்கறிகள் வெந்த பிறகு ஒரு கப் தயிர் சேர்த்து தேவைப்பட்டால் தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்க்கவும் பிறகு அரிசியை அதனுடன் சேர்க்கவும், அரிசியின் அளவானது ஒரு கப் அரிசிக்கு ஒண்ணே கால் கப் தண்ணீர் என்ற விகிதத்தில் 1:1 3/4 வாணலியில் சேர்க்கவும்,

தண்ணீர் கொதித்து வரும் பொழுது அரிசியை நன்றாக கிளறிவிடவும் இப்பொழுது உப்பு சேர்த்து மிதமான தீயை வைத்து மூடி போட்டு மூடி விடவும் சாதம் வெந்து வரும் பொழுது 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும், அவ்வளவுதான்

சுவையான புலாவ் சாதம் ரெடி…

வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *