வழுக்கை

ஆண்கள் வழுக்கையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள்…

வழுக்கை விழுவதை தடுக்கும் உணவுகள்

தலை முடி என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருவருக்குமே அழகு சார்ந்த ஒன்றாகும்.

அதிலும் ஆண்களுக்கு மிகவும் இளம்வயதிலேயே முடி கொட்டுவது ஆரம்பித்து தலையில் வழுக்கை விழுகிறது,,


தினம்தோறும் தலைசீவும்போதெல்லாம் முடி உதிர்வதை பார்த்து மனம் உடைவது ஆண்களின் தற்போதைய சாபக்கேடு ஆகிவிட்டது சகஜமாகிவிட்டது.

வழுக்கை விழ காரணம்:


சிலருக்கு ஜீன்கள் காரணமாக முடி உதிரும், ஆனால் சிலருக்கோ அப்படி இல்லாமல் பொதுவாகவே வழுக்கை விழுவதற்க்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுற்றுசூழல் மாசு,

உடல் வெப்பம்,முடிபராமரிப்பு என சிலவற்றை சொல்லலாம், சரி இதை தடுக்க எவ்வாறான உணவுளின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்,,


புரத சத்துள்ள உணவுகள்:

ஆண்கள் வழுக்கையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள்...


புரத சத்துள்ள உணவுகளான முட்டை மூலம் புரதம் மற்றும் ப்யோட்டின் சத்துக்கள் கிடைக்கின்றது, இதில் புரத சத்து முடி மயிர்க்கால்களில் வலிமையையும், பயோட்டின் ஆனது முடிகளுக்கு தேவையான புரதசத்தான கெரட்டின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது,, எனவே முடி கொட்டுவதை தடுக்க கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் சாப்பிடுவது முடிக்கு நல்ல பலனை அளிக்கும்..


கேரட்:


கேரட் ஆனது கண்பார்வை, மற்றும் இளமையை பாதுகாக்கவும் உதவுவது போல முடிக்கும் தேவையான கரோட்டின் சத்துக்களை தருகிறது, கேரட் இல் வைட்டமின் ஏ,சி, கே,பி போன்ற விட்டமின்கள் நிறைந்துள்ளன, கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது,


பசலைக்கீரை:

ஆண்கள் வழுக்கையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள்...


பச்சைகாய்கறிகள் எப்போதுமே உடலுக்கு நன்மையைத்தரும், அந்த வகையில், பசலைக்கீரை முடி உதிர்விற்க்கு ஒரு நல்ல நிவாரணியாக இருக்கிறது, பசலைக்கீரையில் உள்ள ஒமேகா 3 விட்டமின் ஈ, பி. பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள், கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, எனவே பசலைகீரையை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது,,

நட்ஸ் விதைகள்:

ஆண்கள் வழுக்கையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள்...


நட்ஸ் மற்றும் விதைகளின் மூலம் கிடைக்கப்பெறும் சத்துக்கள் ஏராளம், அதிலும் வால்நட் மற்றும் ஆளிவிதை, பாதாம் போண்றவற்றில் ஒமேகா3, ஒமேகா6 மற்றும் கொழுப்பு அமிலங்கல் நிறைந்துல்ளதால் முடி உதிர்வை தடுத்து வழுக்கையில் இருந்து தப்பிக்க சிறந்த உணவாக இருக்கிறது..

ஆமணக்கு எண்ணெய்:


விளக்கெண்ணை என அழைக்கப்படும் ஆமணக்கு என்ணெய் தலைக்கு குளிர்ச்சி என்பது அனைவரும் அறிந்த்தே, ஆமணக்கு எண்ணெயில் விட்டமின் சத்துக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் தலைக்கு தேய்த்து வந்தால் முடிஉதிர்வது மட்டுமில்லாமல் தலை முடி கருமையையும் வெள்ளை முடி வராமல் பாதுகாக்கும்,


கருவேப்பிலை:

கருவேப்பிலையை அன்றாடம் உணவில் இருந்து தவிப்பது நல்லதல்ல. கருவேப்பிலையில் இருக்கும் எண்ணற்ற சத்துகள் முடியை கருமையாகவும் ஆரோக்யமாகவும் வைத்திருப்பதற்க்கு உதவுகிறது..

இந்த பட்ஜெட்டுல இப்படி ஒரு ஸ்மார்ட் போனா..! பெஸ்ட் ஆப்ஸன் இது மட்டும் தான்..

Share


copy the below code

Leave a Reply

Your email address will not be published.